உலகிலேயே காஸ்ட்லி (12 கோடிக்கு) விலை போன நாய்..

Read Time:2 Minute, 23 Second

003cசீனாவில் நடந்த நாய் கண்காட்சியில் திபெத்திய வேட்டை இன நாய் ஒன்று ரூ.12 கோடிக்கு விலை போனது.

இதன் மூலம் உலகிலேயே காஸ்ட்லியான நாய் என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது. சீனாவின் ஜிஜியாங் மாநிலத்தில், ‘ஆடம்பர செல்ல பிராணிகள்’ கண்காட்சி நேற்று நடந்தது.

உலகின் காஸ்ட்லியான பல்வேறு இன நாய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஷாங் என்பவர் கொண்டு வந்திருந்த திபெத்திய வேட்டை நாய், ரூ.12 கோடிக்கு விலை போனது.

மிகவும் அரிய இனமாக கருதப்படும் திபெத்திய வேட்டை நாய்கள். பார்ப்பதற்கு சிங்கம் போல காட்சியளிக்கின்றன.

சீனர்கள் இந்த நாயை மிகவும் கவுரவமாக கருதுவதால், குயிங்டாவ் நகரை சேர்ந்த தொழில் அதிபர் ரூ.12 கோடி கொடுத்து நாயை வாங்கி உள்ளார்.

ஒரு வயதுடைய அந்த நாய், தங்க நிற முடியுடன் காணப்படுகிறது. 31 இன்ச் உயரமும் 90 கிலோ எடையும் கொண்டுள்ளது. உலகிலேயே காஸ்ட்லி நாய் என்ற பெருமையும் நாய்க்கு கிடைத்துள்ளது.

தான் வளர்த்த நாய்க்கு ரூ.12 கோடி கிடைத்த மகிழ்ச்சியில் ஷாங் கூறுகையில், ‘அரிய பாண்டா கரடிகளை போல இந்த வகை நாய்கள் கருதப்படுகின்றன.

இதனால் அதிக விலை கிடைத்துள்ளது’ என்றார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் இதே வகை நாய் ரூ.9 கோடிக்கு விலை போனது.

இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசியா மற்றும் திபெத் பழங்குடியின மக்களால் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நாய்கள், மற்ற இனங்களை விட மிகவும் விசுவாசம் உள்ளவை என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச படம் எடுத்ததாக புகார்: விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்
Next post சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது