ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்”!!

Read Time:3 Minute, 5 Second

pungudutivu-01புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின் ஆதரவு அற்ற நிலையில், அவரது மரண சடங்கை நாடத்த உதவ வேண்டுமென “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிஸ்லாந்து” அமைப்பிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அவரது மரணசடங்கு செலவுக்காக சிறிய நிதி உதவி எம்மால் வழங்கப்பட்டது என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம்.

“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிஸ்லாந்து” புதிய நிர்வாக சபை பொறுப்பெடுத்த பின்னர், அதன் எந்தவொரு (சிறிதோ, பெரிதோ) செயற்பாடுகளையும், உடனுக்குடன் பகிரங்கப் படுத்தப்பட வேண்டுமென எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இதனை ஊடகங்கள் ஊடாக அனைவருக்கும் அறியத் தருகிறோம். நன்றி..
–“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிஸ்லாந்து”–

pungudutivu-02**எமக்கு சம்பந்தப்பட்டவர்களினால் தரப்பட்ட கடிதம் இது…
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த முத்துவேல் இராசேந்திரம் என்பவர், திருமணம் செய்யாத நிலையில், சகோதரம், உறவினர்கள் அற்ற நிலையிலும், அயலவர்களுடன் சேர்ந்து வாழாது, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபாதை வியாபாரம் செய்தே பொழுதைக் கழித்தார்.

மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் இணைக்கப்பட்டிருந்தார். அவர் மரணம் அடைய நேரிடும் போது, அவரது உடல் வைத்தியசாலையாலேயே அடக்கம் செய்யப்பட இருந்த போது, உங்கள் (புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்) உறுப்பினர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் ஊரவர் மரியாதைக்குட்பட “பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறும், அதற்குரிய சிறிய நிதிஉதவியைச் செய்யலாம்” எனக் கூறி இருந்தார்கள்.

இதற்கமைய இன்று (02.03.2014) கேரதீவு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தங்களின் உதவிக்காக நாம் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், ஊரவர் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றுக்கு பெருமையடைகிறோம். நன்றி!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்
Next post தமிழ் யுவதிகள் துன்புறுத்தப்படவில்லை: இராணுவம்