கணவரை அறிவித்து விட்டார், நடிகை இலியானா
தனது வருங்கால கணவர் வருண் தாவனை போன்று இருக்க வேண்டுமென்று மறைமுகமாக காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் இலியானா.
தெலுங்கு நடிகையான இலியானா தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ளார.;தற்போது இந்தியில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் சம்பளத்தை ஒரு கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளார்.
இவர், மெயின் தேரா ஹீரோ படத்தில், வருண் தவானுடன் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கத் தொடங்கிய நேரத்தில் இருந்தே இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்கள்.
இதுவரை லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திராத இலியானா இந்தப் படத்தில் வருண் தவானுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து அசத்தினார்.
இப்போது தான் வருணை காதலிப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
வருண் மிகவும் அன்பானவர், இனிமையானவர், புத்திசாலி. அவரது குணங்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகிறது.
எனக்கு கணவராக வருகிறவர் வருணின் குணங்கள் உள்ளவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் இலியானாவை காதலிப்பதாவோ, குறைந்த பட்சம் அவருடன் நட்பாக இருப்பது பற்றியோ வருண் இதுவரை வாய்திறக்கவே இல்லை.
Average Rating