நார்வே நாட்டில் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்டு வருவதற்கு தடை

Read Time:1 Minute, 2 Second

norweflagnew.gifநார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் தலையில் முக்காடு போட்டு வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. மாணவர்களின் முகத்தை பார்க்காமல் ஆசிரியர்கள் தங்கள் வேலையை சரிவர செய்ய முடியாது என்று நகர கல்வி துறை கூறி உள்ளது. இந்த தடை வருகிற ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைக்கு வரும். நார்வே நாட்டு சட்டப்படி இது சட்ட விரோதம் அல்ல என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர். நார்வே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் (பாகிஸ்தானியர்களும், சோமாலியர்களும்) இந்த நடவடிக்கை தனி நபர் சுதந்திரத்தின் மீதான ஆக்கிரமிப்பு ஆகும் என்று கூறி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய படகில் இருந்து 73 பேரை கடற்படை மீட்டது.
Next post மன்னாரில் புலிகள் போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவினர் சந்திப்பு.