போரை முடிவுக்கு கொண்டுவர, ரணில் வைத்திருந்த திட்டம்..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 51 Second

006dஅடுத்த ஜனா­தி­பதி தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற சூழலில், பலரும் கடந்த கால வர­லாற்றைத் திரும்பிப் பார்க்க முனைகின்றனர்.

அடுத்த ஆண்டு ஜன­வரி   மாதம் நடக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஜனா­தி ­பதி தேர்தல், கத்­தோ­லிக்க மக்­களின் திருத்­தந்­தை­யான பாப்­ப­ரசர் பிரான்சிஸ் இலங்­கைக்கு மேற்­கொள்­ள­வி­ருக்கும் பய­ணத்தால், அடுத்த ஆண்டு மார்ச், ஏப் ரல் வரை பிற்­போ­டப்­ப­டலாம் என்றும் கூறப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும், விரைவில் ஒரு ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்ள நாடு தயா­ராகி வரு­கி­றது.

இதற்­கென பல்­வேறு தரப்­பு­களும், பல்­வேறு முன்­னா­யத்­தங்­களை மேற்­கொள் ளத் தொடங்­கி­யுள்­ளனர்.

அர­ச­த­ரப்பு ஒரு­பக்கம் தனது வெற்­றி­வாய்ப்பை உறு­திப்­ப­டுத்திக் கொள்ளத் தயா­ராகி வரும் நிலையில், எதிர்க்­கட்­சி­ யான ஐ.தே.கவும் ரணில் விக்கிரமசிங்கவை  பொது­வேட்­பா­ள­ராக  நிறுத்­து­வ­தற்­கான பேச்­சுக்­களை இர­க­சி­ய­மாக மேற்­கொண்டு வரு­கி­றது.

அதற்கு வெளியே பொது­வேட்­பா­ள ரைத் தெரிவு செய்யும் முயற்­சி­களும் நட க்­கின்­றன.

இந்தச் சூழலில், 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வியைச் சந்­தித்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தான் அப்­போது அதி­கா­ரத்­துக்கு வந்­தி­ருந்தால், போரை வேறு வழியில் முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருப்பேன் என்று கூறி­யி­ருக்­கிறார்.

போரை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­ தற்கு பல்­வேறு வழிகள் இருந்­த­தா­கவும், சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வி­டமும் சில வழி கள் இருந்­தி­ருக்­கலாம் என்றும் அவர் குறி ப்­பிட்­டுள்ளார்.

ஆனால், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இறு­திக்­கட்டப் போரை முடி­வுக்குக் கொண்டு வரும் போது, சில உள­வியல் கார­ணி­க­ளையும் அர­சியல் கார­ணி­க­ளை யும் கருத்திற் கொள்­ள­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

எவ்­வா­றா­யினும், ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்­டது போன்று போரை முடி­வுக் குக் கொண்டு வரு­வ­தற்கு அப்­போது, இரண்­டே­யி­ரண்டு தெரி­வுகள் தான் இருந்­தன.

1.முத­லா­வது, அமை­தி­யான வழியில் தீர் ப்­பது.

2. இரண்­டா­வது, போரின் மூலம் தீர்ப்­பது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமை­தி­யாக – போரின்றிப் பிரச்­சி­னையைத் தீர்க்­கவே திட்­ட­மிட்­டி­ருந்தார் என்­பதும், அதன் கார­ண­மா­கவே அவர் ஜனாதி­பதி தேர்தலில் விடு­தலைப் புலி­களால் திட்­ட­மிட்டுத் தோற்­க­டிக்­கப்­பட்டார் என்­பதும் உண் மை.

அதே­வேளை, பிரச்­சி­னையை போர் மூலம் தீர்க்க முடிவு செய்­தி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

அவர் திட்­ட­மிட்­ட­படி, அவர் எதிர்­பார் த்­த­ப­டியே, போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டது.

ஆனால், அவரால் நிலை­யான அமை­தி யைக் கொண்டு வர­மு­டி­ய­வில்லை.

விடு­தலைப் புலி­களும், கூட மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யானால், போரை யே தெரிவு செய்வார் என்று எதிர்­பார்த்­த னர்.

அவர்­களின் அந்தக் கணிப்பு மட்டும் தான் சரி­யாகிப் போனது.

கடும் கோட்­பாட்­டா­ள­ரான அவ­ருடன் போர் செய்­வது, அமைதிப் பேச்­சுக்­களை நடத்­து­வதை விட இல­கு­வா­னது என்று புலிகள் கணக்குப் போட்­டனர். ஆனால், அந்தக் கணக்குத் தவ­றாகிப் போனது.

அதன் விளைவு, புலி­க­ளையும் இல்­லா மல் செய்­த­தோடு, போரை முடி­வுக்குக் கொண்டு வரும் வாய்ப்­பையும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்­கி­யது.

ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கணக்கு வேறு வித­மா­ன­தாக இருந்­தது.

அவர், பிர­த­ம­ராகத் தெரிவு செய்­யப்­பட்­ட­துமே, விடு­தலைப் புலி­க­ளுடன் போர்­நி­றுத்த உடன்­பாட்டைச் செய்து கொண் டார்.

புலி­க­ளுடன் அமைதிப் பேச்­சுக்­களை நடத்திக் கொண்டே, அவரும் கூட, இன் ­னொரு போருக்­கான முன்­னா­யத்­தங்­க ளைச் செய்யத் தவ­ற­வில்லை.

அந்த முன்­னா­யத்­தங்கள் எல்­லாமே வெளிப்­ப­டை­யாக இடம்­பெ­ற­வில்லை.

சில மறை­வா­கவும் இடம்­பெற்­றன. சில வெளிப்­ப­டை­யா­கவும் இடம்­பெற்­றன.

அப்­போ­தைய சூழலில் எல்­லா­வற்­றுக்­குமே ரணில் பொறுப்­பேற்க வேண்­டிய சூழல் இருக்­க­வில்லை.

அதா­வது, ஜனா­தி­ப­தி­யாக சந்­தி­ரிகா இருந்த வேளையில், படைகள் முழு­வதும் தன் கட்­டுப்­பாட்டில் இல்லை என்று காரணம் கூறு­கின்ற வசதி அவ­ருக்கு மிக வும் சாத­க­மா­கவும் வாய்த்­தி­ருந்­தது.

உயர்­பா­து­காப்பு வலய விவ­காரம், கடல் வழிப் பயண விவ­காரம் போன்­ற­வற்றில் முட்­டுக்­கட்­டைகள் ஏற்­பட்ட போது அவர் இதனை வைத்தே சமா­ளித் துக் கொண்டார்.

அது­போ­லவே, விடு­தலைப் புலி­களை உடைப்­ப­தற்­கான இர­க­சிய முயற்­சி­க­ளி லும், அர­ச­த­ரப்பு அப்­போது ஈடு­பட்­டது.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் பிளவு ஏற்­பட்டபோது, புலி­களின் தாக்­கு­தலில் இருந்து தப்­பிய கரு­ணாவை, ஐ.தே.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த அலி­சாகிர் மௌலானா தான் காப்­பாற்றி கொழும்­புக்கு கொண்டு சென்றார்.

புலி­களைத் தாமே அழித்­த­தாக, அர­சாங்கம் மார்­தட்­டிய போது, விடு­தலைப் புலி­களை பிள­வு­ப­டுத்­தி­யது தாங்­களே என்றும், அவர்­களின் அழி­வுக்கு பிள்ளையார் சுழி போட்­டது தாமே என்றும் ஐ.தே.க. தலை­வர்கள் பிற்­கா­லத்தில் கூறி­யதை மறந்து விட முடி­யாது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வ­ரையில், அதி­கா­ரத்­துக்கு வந்தால், போரை வேறு வழியில் முடி­வுக்குக் கொண்டு வரவே திட்­ட­மிட்­டி­ருந்தார்.

அதா­வது விடு­தலைப் புலி­களைப் பல­வீ­னப்­ப­டுத்தி, சர்­வ­தேச அளவில் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து, அவர்­களைப் போரி­டவோ, பேசவோ வழி­யற்­ற­வர்­க­ளாக்கி – வழிக்குக் கொண்டு வர முனைந்­தி­ருந்தார்.

அதற்­காக அவர் அமெ­ரிக்கா உள்­ளி ட்ட நாடு­க­ளுடன் கைகோர்த்­தி­ருந்தார்.

விடு­தலைப் புலிகள் மீது கொண்டு வரப்­பட்ட தடைகள், அவர்­க­ளுக்கு எதி­ராக உரு­வாக்­கப்­பட்ட சர்­வ­தேச வலைப்­பின்­னல்கள், எல்­லாமே புலி­களைச் செயலற்­ற­வர்­க­ளாக்கும் வகை­யி­லா­ன­வையே.

விடு­தலைப் புலி­களைப் பேச்சு மேசை­யிலும், அதி­கா­ரத்தைப் பேண முடி­யாமல், போரையும் தொடங்க முடி­யாத கட்­டத்­துக்குள் கொண்டு வந்து, அவர்­களின் கதையை முடிப்­பதே ரணிலின் திட்டம்.

அத்­த­கைய திட்டம் பெரும் ஆபத்­தா­ன­ தாகப் புலி­களால் அப்­போது நோக்­கப்­பட்­டது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யானால், குறைந்­த­பட்ச தீர்வு ஒன்­றுக்கு இணங்கிப் போக வேண்­டிய நிலைக்குத் தாம் அழுத்தம் கொடுக்­கப்­ப­டுவோம் என்றும், தமது படை­வலு மெது­வாக கரைக்­கப்­பட்டு விடும் என்றும் புலிகள் கணக்குப் போட்­டனர்.

அந்த வகையில் புலி­களின் கணக்கு சரி­யா­ன­தா­கவே இருந்­தது.

புலி­களை இரா­ணுவ ரீதி­யா­கவும், அர­சியல் ரீதி­யா­கவும் வலு­வற்­ற­வர்­க­ளாக மாற்­று­வதும், சர்­வ­தேச ஆத­ர­வுடன், அவ ர்­கள் மீது ஒரு தீர்வைத்திணிப்பதும் தான் ரணிலின் திட்டம்.

அதற்கு இடம் கொடுப்­பதைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே புலிகள், 2005ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், மஹிந்த ராஜ பக் ஷவும், ஜனா­தி­பதி தேர்­தலைப் புறக்­க­ணிக்க முடிவு செய்­தனர்.

தமிழ் மக்கள் சார்பில், ஜனா­தி­பதி தேர்­தலை புறக்­க­ணிக்க, விடு­தலைப் புலிகள் எடுத்த முடிவு, நிச்­சயம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்குப் பாத­க­மா­னது. மஹிந்த ராஜ பக் ஷவுக்கு சார்­பா­னது என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்­தே­யி­ருந்­தது.

தமிழ் மக்­களை தேர்­தலைப் புறக்­க­ணிக்க அழுத்தம் கொடுத்­ததன் மூலம், விடு­தலைப் புலிகள் மிகப் பெரிய தவறு செய்து விட்­ட­தாக, இன்றும் கூட குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன.

விடு­தலைப் புலிகள், தமது இரா­ணுவ பலத்தை மட்டும் நம்பிக் கொண்டு அந்த முடிவை எடுத்­தி­ருந்­தனர்.

அன்­றைய நிலையில், ரணில் விக்­கி­ர­ம ­சிங்­கவின் அர­சாங்கம், சர்­வ­தேச சக்­தி­க ளின் ஆத­ர­வுடன் தமக்­கெ­தி­ராக வகுத்த வலைப்­பின்­னலை விடு­தலைப் புலிகள் அறிந்­தி­ருந்­தனர்.

எனவே, ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ ப­தி­யா­னாலும் கூட, அவரால் ஏற்­படக் கூடிய பாதகத் தன்­மையை விட, ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யானால், ஏற்­படக் கூடிய பாதிப்பு குறை­வா­கவே இருக்கும் என்று அவர்கள் கணக்­கிட்­டனர்.

கடும்­போக்­கு­வாதம் எப்­போ­துமே போருக்குச் சாத­க­மான நிலையை உரு­வாக்கும் என்று கரு­தி­யதால் புலிகள், அப்­போது மஹிந்த ராஜபக் ஷவுக்குச் சார்­பான நிலையை எடுத்­தனர்.

ஆனால், விடு­தலைப் புலி­களின் அந் தக் கணிப்புத் தப்­பாகிப் போனது.

அதே­வேளை, ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கி­யி­ருந்தால் கூட, ஒரு கட்­டத்தில் அவரும் கூடப் புலி­களை ஏதோ ஒரு விதத்தில் அழித்திருப்பார்.

அல்­லது அதற்கு அண்­மைய நிலை வரைக்­கு­மா­வது கொண்டு சென்­றி­ருப் பார்.

ஏனென்றால், இப்­போது அவர் கூறு­வது போல, தானும் போரை முடி­வுக்குக் கொண்டு வரும் வழி­யொன்றைக் கொண்­டி­ருந்­த­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அது அமைதி வழி என்று மட்டும் அவர் கூற­வில்லை.

அவ­ரது வழி, சர்­வ­தேச பின்­புல ஆத­ர­ வுடன் புலி­களைப் போரிட முடி­யாத உறை நிலைக்குக் கொண்டு வரு­வ­தே­யா கும்.

அதற்கு அமெ­ரிக்கா தாரா­ள­மாக உத­வி­யி­ருக்கும்.

புலி­களின் ஆயுத விநி­யோக வழித் தட ­யங்­களை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்குக் காட்டிக் கொடுத்­தது அமெ­ரிக்கா தான்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சியில் இருந் திருந்தால், இன்னும் அதிகமாகவே அமெரிக்கா பங்களித்திருக்கும்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க எந்த வழிமுறையைப் பின்பற்றிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தி ருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசா ங்கத்தைப் போல, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்க மாட்டார்.

ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவின் வியூகம் சர்வதேச வலைப்பின்னலின் ஊடாகப் புலிகளை வீழ்த்துவதாகும்.

அதனால் தான், அவர், இறுதிக் கட்ட போரை முடிவுக்குக் கொண்டு வரும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சில உளவியல் காரணிகளையும் அரசியல் கார ணிகளையும் கருத்திற் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் என்பது, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி யின் தொடக்கமாக இருந்தது.

அதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வீழ்ச்சி தடுக்கப்பட முடியாத ஒன்றாகவே மாறியிருந்தது என்பதே உண்மை.

-கபில்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறுதலாக அறிவிக்கபட்ட, அழகி பட்டம் திரும்ப பெறபட்டது..
Next post நண்பனுடன் கள்ளத்தொடர்பு – மனைவியை கொன்ற கணவர்!!