இன்டர்நெட் விளையாட்டுக்கு வியத்நாம் தடை

Read Time:1 Minute, 8 Second

viednam.jpg சமூகத்துக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி இன்டர்நெட் விளையாட்டுக்கு வியத்நாம் அரசு தடை விதித்துள்ளது. ” வாளேந்திய வீரர்கள் ” என்ற இன்டர்நெட் விளையாட்டு சமீபத்தில் வியத்நாம் இளைஞர்களிடையே பிரபலமாகி உள்ளது. இந்த விளையாட்டு, அமானுஸ்ய சக்திகள் கொண்ட குங் ஃபூ வீரர்கள் சண்டையிடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. வியத்நாமில் இன்டர்நெட் விளையாட்டு 2005-ல்தான் அறிமுகமாகியது. இந்த ஓராண்டில், பள்ளிக் குழந்தைகளிலிருந்து, நாற்பது வயதுக்காரர்கள் வரை இன்டர்நெட் விளையாட்டுக்கு அடிமையாகி விட்டனர். சில பள்ளிக் குழந்தைகள் இன்டர்நெட்டில் விளையாடுவதற்கு மட்டுமே தினமும் 3 மணிநேரத்துக்கு மேல் செலவிடுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறுவர் கடத்தல் தொடர்பாக யுனிசெப்பின் அறிக்கையும்- ரிஎம்விபியின் பதிலும்-
Next post சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கட்டுபெத்தவில் முற்றுகை.