தவறிழைத்தது சமந்தாவா? சார்மியா?
Read Time:1 Minute, 25 Second
ஹிந்தியில் கங்கணா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற ‘குயின்’ படத்தை தமிழில் மீளுருவாக்கம் செய்யும் உரிமையை இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கி வைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மீள் உருவாக்கம் செய்யப்படவிருப்பதால், நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையை நடிக்க வைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக தமிழில் சமந்தாவை அணுகியுள்ளனர். ஆனால், ஹிந்தியின் திரை களம் வேறு அங்கு வெற்றி பெற்ற எல்லா படங்களும் இங்கு வெற்றி பெறாது என்று கூறி வாய்ப்பை மறுத்து விட்டார்.
இதனையடுத்து, நடிகை சார்மியை அணுகி போது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம். பிற மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
இந்த விடயத்தில் சரியான முடிவெடுத்தது சமந்தாவா? சார்மியா? என படம் வௌிவந்த பின்தான் தெரியும்.
Average Rating