கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த வைத்தியசாலைக்கு சீல்!!

Read Time:1 Minute, 48 Second

1612066110secvpஇந்தியாவில் பெண் குழந்தைகளை சிசுக் கொலை செய்யும் தீயப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கர்ப்பக் காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் என்ன? என்பது தொடர்பான விபரங்களை ‘ஸ்கேன்’ மூலம் கண்டறிந்து அறிவிக்கும் பழக்கத்துக்கு மத்திய-மாநில அரசுகள் முற்றிலுமாக தடை விதித்துள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் தலைமை டாக்டர் பணியில் இல்லாத நேரம் பார்த்து, நேற்று ஒரு கர்ப்பிணிக்கு ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்து, அவரது வயிற்றில் வளர்ந்துவரும் சிசுவின் பாலினம் என்ன? என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

செவிவழி செய்தியாக இந்த தகவல் வெளியில் கசிந்ததை தொடர்ந்து, அந்த வைத்தியசாலைக்கு மாவட்ட மருத்துவ அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

சட்டமீறலாக நடைபெற்ற இந்த சோதனை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த வைத்தியசாலையின் தலைமை டாக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த வைத்தியசாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை!!
Next post நித்யானந்தாவுக்கு அடுத்த வாரம் ஆண்மை பரிசோதனை!!