நித்தியின் ஆண்மைப் பரிசோதனைக்கு இடைக்காலத் தடை!!

Read Time:3 Minute, 20 Second

1232331460Untitled-1நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சாமியார் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நித்யானந்தா மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நித்யானந்தாவின் கோரிக்கையை ஏற்று, ஆண்மை பரிசோதனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதே நேரம், இந்த விவகாரம் கடந்த 4 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து கொண்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் செயல்பாடுகள், வழக்கிற்கு இடையூறாக உள்ளது. வழக்கிற்கு முட்டுக்கட்டை போட யாரும் முயற்சிக்கக் கூடாது. இந்த வழக்கு 2010ல் தொடங்கப்பட்டது. இப்போது 2014ல் இருக்கிறோம். இதுபோல் வழக்கு இழுத்து கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது. இந்த விசாரணை ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இரத்தம் மற்றும் குரல் பரிசோதனையை நடத்தக் கூடாது என்று ஏன் கேட்கிறீர்கள்? இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரும், கர்நாடக அரசும் ஒரு வாரத்தில் தங்களுடைய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாகக் கூறிய நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 1ம் திகதி பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 1ம் திகதி பிறப்பித்த உத்தரவில், நித்யானந்தா மற்றும் அவரது 4 சீடர்களுக்கு எதிராக ராமனகாரம் தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் பிறப்பித்த கைது வாரன்ட்டுக்கு தடை விதித்தது.

அதேநேரத்தில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கில் ராமனகாரம் தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் (சிஜேஎம்) நீதிமன்றத்தில் நித்யானந்தா மற்றும் அவரது நான்கு சீடர்கள் ஆகஸ்ட் 18ம் திகதி ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு!!
Next post அடுத்த சில்க் ஸ்மிதா?