நூடில்சில் போதைப் பொருளை கலந்து விற்ற ஹோட்டல்!!

Read Time:2 Minute, 9 Second

2090225884Untitled-1சுவையான உணவு வகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களை கவரும் ஹோட்டல்கள் மத்தியில், போதைப் பொருள் கலந்த நூடில்சை வழங்கிய சீன உணவக உரிமையாளரை, பொலிசார் கைது செய்துள்ளனர்.

சீனாவின், ஷாங்சி மாகாணத்தில் உள்ள, ஒரு ஹோட்டலில் வழங்கப்படும் நுாடில்ஸ், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஒரு முறை நூடில்ஸ் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வரத் தொடங்கினர்.

இந்நிலையில், போதைப் பொருள் உபயோகித்து வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கும் பணியில், அந்நாட்டு போக்குவரத்து பொலிசார் ஈடுபட்டனர். அப்போது, 26 வயதுள்ள வாலிபர் ஓட்டி வந்த காரை நிறுத்தி, அவரது சிறுநீரை பரிசோதித்தபோது, போதைப் பொருள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, அவரிடம் பொலிசார் விசாரித்தபோது, தனக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், குறிப்பிட்ட ஹோட்டலில் நூடில்ஸ் சாப்பிட்டுவிட்டு வருவதாகவும் கூறினார்.

இதையடுத்து, அந்த வாலிபர் குறிப்பிட்ட ஹோட்டலுக்கு சென்ற பொலிசார், அங்கிருந்த நூடில்சை கைப்பற்றி, சோதனை செய்தபோது, அதில், ´ஓபியம்´ என்னும் போதைப் பொருள் கலந்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து, ஹோட்டல் உரிமையாளரிடம் பொலிசார் விசாரித்தபோது, உணவின் சுவையைக் கூட்டுவதற்காக, ஓபியம் கலந்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்து, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 35 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு!!
Next post எம் மண்ணில் அதற்கு அனுமதி கிடையாது!!