மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50000 அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Read Time:2 Minute, 27 Second

cc488df9-ec81-4fc4-be70-f1429998f13f_S_secvpfசென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த 2012 ஆம் வருடம் தனது வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவனை ஆசிரியையான மெகருன்னிசா கன்னத்தில் கிள்ளியுள்ளார். இது குறித்து அவனது தாய் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், மனித உரிமையை மீறியதற்காக அப்பள்ளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தனது மகனின் மாற்று சான்றிதழை உடனடியாக வழங்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் அவனது தாயார் கேட்டுக்கொண்டார். ஆனால் பள்ளி நிர்வாகமோ மாற்று சான்றிதழை தாமதமாக தான் வழங்கியுள்ளது.

பள்ளிக்கு அபராதம் குறைவாக விதிக்கப்பட்டது மற்றும் மாற்று சான்றிதழில் தாமதம் ஆகிய காரணங்களால் அதிருப்தியடைந்த அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே சமயம் மகனின் கன்னத்தில் கிள்ளிய ஆசிரியை மீதும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் பள்ளி ஆசிரியை தன்னை பல்வேறு அமைப்புகள், தங்களது நடவடிக்கையின் மூலம் தொந்தரவு செய்வதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகியோர், ஆசிரியை மீதான வழக்கு நடைபெறும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலேயே இது குறித்து முறையிடலாம் என்றும், மாணவனின் கன்னத்தை கிள்ளிய குற்றத்திற்காக ரூ.50000 அபராதம் கட்டவும் உத்தரவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய, சில பாலிவுட் பிரபலங்களின் மறக்க முடியாத தருணங்கள்!!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இறந்த சினை ஆட்டின் வயிற்றில் மனித தலை போன்று இருந்த அதிசய ஆட்டு குட்டி!!