வவுனியாவில் இந்தியன் வீட்டுத் திட்டத்தின் உண்மை நிலை என்ன? பங்கீடுகள் எவ்வாறு உள்ளன?? -கழுகுப் பொறி!!

Read Time:5 Minute, 48 Second

indian-veeduவவுனியா மாவட்டத்தில் 4500 இந்தியன் வீட்டுத்த திட்டங்கள் யுத்தத்தின் காரணமாக பாதிப்படைந்த, வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களைப் போல் அல்லாது வவுனியா மாவட்ட இந்தியன் விட்டுத் திட்ட தெரிவில் வன்னி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வர்த்தக கைத் தொழில் அமச்சர் றிசாட் பதியூதீன் அவர்களின் அதிகார செல்வாக்கு உள்ளதாக கூட்டமைப்பும், அவ்வாறு இல்லை நியாயாமான முறையில் இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பும் மாறி மாறி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் அதிரடி இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் உண்மத் தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை, பல அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் 2218 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் தேவை என விண்ணப்பித்த போதும் 304 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது. இது 13.70 வீதமாகும். இதேபோல் 914 முஸ்லிம் மக்கள் வீடு தேவை என விண்ணப்பித்த நிலையில் 1169 வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இது 127.17 வீதமாகும். இங்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கயை விட மேலதிகமாக வீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டது? செட்டிகுளம் பிரதேச செயலாளர் உண்மைய வெளிப்படுத்துவாரா? அல்லது தொடர்ந்து பஞ்சோந்தி போல இருக்கப் போறாரா?

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் சார்பாக 2051 குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்த நிலையில் 504 பேருக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 24.60 வீதமாகும். அதேபோன்று வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப் பிரிவில், தமிழ் குடும்பங்கள் 38 விண்ணப்பித்த நிலையில் 34 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 89.40 வீதமாகும். அதே பகுதியில் 773 சிங்கள குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில் 545 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 70.50 வீதமாகும்.

வவுனியா நகர பிரதேச செயலாளர் பிரிவில் 5902 தமிழ் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில் 1096 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 18.60 வீதமாகும். இதே பிரிவில் 569 முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தினை கோரிய போதும் 465 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது. இது 82.7 வீதமாகும்.

இவ்வாறு மூன்று கட்டங்களிலும் பகிரப்பட்டதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 10,209 தமிழ் மக்கள் முழுமையாக வீட்டினை இழந்து அதனை கோரியுள்ள போது 1938 பேருக்கு மட்டும் அவ் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 18.9 வீதமாகும். 773 சிங்களக் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தைக் கோரிய போதும் 545 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 70.5 வீதமாகும். இவ்வாறு இருக்கும் நிலையில் 1483 முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தை கோரிய போது 1634 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 110 வீதமாகும்.

இன விகிதாசார அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் கூடிய சனத்தொகையை கொண்டவர்களாகவும் கூடிய வீட்டுத் திட்டங்களை கோரியவர்களாகவும் தமிழர்கள் இருக்கும் போதும் போது இரண்டாம் நிலையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் கோரியதை விட மேலதிகமாக வீட்டுத் திட்டங்கள் எவ்வாறு வந்தது? திடீர் என மேலதிக குடும்பங்கள் எங்கிருந்து வந்தன? பதில் சொல்லப் போவது யார்?

இது ஒரு புறம் இருக்க, தமக்கான வீட்டுத் திட்டத்தைப் பெற அல்லோலகல்லோலப் படும் மக்களிடம் லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளும் பலர் உள்ளனர். அவர்கள் தொடர்பான விபரங்களுடன் மீண்டும் சந்திப்போம்…
—அதிரடி இணையத்தளம்—

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படி ஒரு PHOTO SHOOT ஏன் நடந்தது..?
Next post மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் – நிபுணர்கள் தகவல்!!