தந்தையாகும் டோனி!!

Read Time:1 Minute, 56 Second

dhoniஇந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் டோனி விரைவில் தந்தையாக போகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான தலைவராக தொடர்பவர் எம்.எஸ்.டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இவரே தலைவர் . சென்னை அணியின் தொடர்ச்சியான வெற்றிகளால் புழகாங்கிதம் அடைந்துள்ள, தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இவரை ‘எங்க தல’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

டோனிக்கும் சாக்ஷிக்கும் 2010, ஜூலை 4ம் திகதி திருமணம் நடைபெற்றது. இதனால் சென்னை ரசிகர்களுக்கு.

திருமணமாகி 4 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், டோணி குடும்பத்தில் குவா… குவா சத்தம் விரைவில் கேட்கப் போகிறதாம். வட இந்திய ஊடகங்கள் சில, சாக்ஷி கர்ப்பவதியாகியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே, டோனி இலங்கைக்கு எதிரான நடப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகிறார். மகிழ்ச்சி செய்தி தந்த மனைவியுடன், பொழுதை கழிக்கவே டோணி கிரிக்கெட்டில் ஆப்சென்ட் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ, டோணிக்கு குழந்தை பிறந்ததும், ‘சின்ன தல பிறந்ததற்கு பெரிய விசில் அடிங்க’ என அந்த குழந்தையை தங்கள் அண்ணன் குழந்தையாக நினைத்து விசில்போட தயாராகிவிட்டனர் தமிழக ரசிகர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சின்னாளபட்டி அருகே முன்விரோதத்தில் தாக்கியவர் மீது போலீசில் புகார்!!
Next post நாசரேத் அருகே கல்லூரி மாணவி கடத்தல்: காதலனுக்கு வலைவீச்சு!!