வெடிபொருள் ஆயுதங்கள் குறித்து இலங்கையிடம் அனுபவம் பகிரலாம்!!

Read Time:1 Minute, 46 Second

13164307331703108712ravinatha-ariyasinghe2கண்ணிவெடி அகற்றல் மற்றும் வெடிபொருள் ஆயுதங்கள் குறித்து இலங்கையுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் புதைக்கப்பட்ட பல கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக குண்டுகள் குறித்து இலங்கை பாதுகாப்பு படையினரிடம் தகவல்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வெடிபொருள் ஆயுதங்கள் குறித்த மாநாடு ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த மாநாட்டின் அடுத்த ஆண்டு தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் தலைமை வகித்த போலந்து நாட்டு நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்த தகவலை அறிவித்துள்ளார்.

சமாதானத்திற்கான ஐநா சாசனத்தை இலங்கை அனுமதிப்பதாக ரவிநாத் ஆரியசிங்க இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கம் என்றும் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் 19ம் திகதி வெளியாகும்?
Next post ஜனாதிபதி மஹிந்த பொய் காரர் – டுவிட்டரில் எரிக் சொல்ஹெய்ம்!!