சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஆரம்பம்!!

Read Time:2 Minute, 12 Second

508617655Untitled-12015ம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் இன்று (06) பவுர்ணமி தினத்தன்று ஆரம்பமாகியுள்ளது.

சிவனொளிபாதமலையானது சப்ரகமுவ, மத்திய மாகாணங்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு இந்து சமய நம்பிக்கையின் படி சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு, பௌத்தர்கள் இதனை கௌதம புத்தரின் காலடிச் சுவடாகவும் இஸ்லாமியர்கள் ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர்.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரங்கள் நல்லதண்ணி பாதை வழியாக இன்று மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதலை நாயக்க தேரத் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.

மேலும் சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

இரத்தினபுரி வழியாகவும், ஹட்டன் வழியாகவும் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொள்ள முடியும்.

அத்துடன் இங்கு மது அருந்த தடைசெய்யப்பட்டுள்ளது. ஒழுங்கான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சரியான ஆடை அணிய வேண்டும் மற்றும் எந்தவிதமான இசைக்கருவிகள் கொண்டு செல்ல முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை!!
Next post பகடை பகடை (திரைவிமர்சனம்)!!