பூனைக்கு யார் மணி கட்டுவது!! இலங்கையின் எதிர்கால அரசியல்??

Read Time:15 Minute, 44 Second

Untitledஇன்றைய இலங்கையின் எதிர்கால சமூகத்தின் அரசியல் இறுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வி முன்னைய காலங்களை விட அதிகமாகவே பேசப்படுகின்றது. இலங்கையில் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் என்றும் இல்லாத அளவுக்கு இன்று கூர்ந்து பேசப்படுவதின் பிண்ணனிகளின் நோக்கம் என்ன என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்களா என்பதை அறியமுற்படுகின்றது அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை தீர்மாணிக்க முடியாததொன்றாகி போயுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் பிரதமருக்கு அந்த நிறைவேற்று அதிகார முறை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தற்போது அதி தீவிரமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகிச் சென்ற மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிர்கட்சிகள் சில ஏற்றுக் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த அதிகார வர்க்கமே தான் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் என்பதாக எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை வரவேற்புக்குரியது. இதனை மக்கள் ஏற்றும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவர் நல்லதை நாட்டுக்கும் மக்களுக்கும் செய்கின்றாரே அவரை தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் அவதானித்து வந்துள்ளோம். தேர்தல் முடிவுகள் அவ்வாறே அமைந்திருப்பதையும் கடந்த கால கள நிலவரங்களை வைத்து பார்க்கலாம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதன் மூலம் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்கலாம் என்று மக்கள் மத்தியில் ஆளமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டும்.

இந்த நிலையில் ஆளும் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது அணியில் இருக்கின்றவர்கள் உண்மையாகவே நாட்டுக்கு விசுவாசமானவர்கள் என்பதாகவும்,இவர்கள் தமக்கு பெரும் பலம் என்பதையும், தன்னில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தமது தனிப்பட்ட பதவிகளில் மோகம் கொண்டிருந்த நிலையில் அவர்களால் எதிர்பார்த்ததை அடைவதில் சிரமம் இருந்ததாகவும் சில கூட்டங்களில் காரசாரமாக குறிப்பிட்டுமுள்ளார். அதே போல் எதிர்கட்சி பொது வேட்பாளர் உள்ளிட்டவர்கள் குறிப்பாக மைத்திரிபல சிறிசேன மற்றும் நவீன் திசாநாயக்க போன்றவர்களின் கருத்துக்களை பார்க்கின்ற போது ஜனாதிபதியின் அமைச்சரவையில் சுதந்திரம் இல்லை எதனையும் அவர் செய்யவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டினையே முன் வைத்துள்ளதை காணமுடிகின்றது.

இது இவ்வாறு இருக்கையில் அரசியலில் நீண்டகால நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பதற்கு கட்சிகள் தற்போது கொண்டுள்ள கூட்டுக்களில் இருந்து அறிந்து கொள்ளமுடிகின்றது. அன்று ஜனாதிபதி சந்திரிக்க ஜனாதிபதி ரணில் பிரதமராக இருந்த போது சந்திரிக்கா அவர்கள் பதவி இழக்க காரணமாக இருந்த ஜக்கிய தேசிய கட்சி இன்று அம்மையாரின் வழி நடத்தலில் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதுவும் நல்லதாகத தான் தெரிகின்றது. ஆனால் ஒவ்வொருவரினதும் அரசியல் பிரவேசம் இன்றைய காலகட்டத்தில் தமது தனிப்பட்ட அரசியல்.குடும்ப நலன்களை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது என்பது இங்கு புலனாகின்றது.

இது இவ்வாறு இருக்கையில் மூன்று முக்கிய சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இன்னும் தமது அறிவிப்பை வெளியிடவில்லை. எதிர்வரும் 8 திகதி யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் வெளிவரும் என கட்சிகள் கூறியுள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைமையாக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளன. இந்த சந்திப்பின் போது கடந்தகால சம்பவங்கள்,மற்றும் இல்ஙகை முஸ்லிம்களின் பாரம்பரிய காலசாரங்கள், இஸ்லாமிய சட்டங்கள், மற்றும் கல்வி, தொழில் வாய்ப்பில் சமஉரிமை அதாவது விகிதாசாரம் பேணப்படல்,மௌலவி ஆசிரிய நியமனங்கள்,வடக்கு முஸ்லிம்கள், தழிழர்கள், சிங்களவர்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல கோறிக்கைகளை முன் வைத்துள்ளதாக நம்பகமாக தெரியவருகின்றது.

அதே போல் கொலன்னாவை பிரதேச சிறுபான்மை மக்களின் நீண்ட கால கோறிக்கையான தமிழ் மொழி மூலமான பாடசாலை,கண்டியில் தனியான ஆண்கள் பாடசாலை ,திருமலை கறுமலையூற்று பள்ளிவாசல் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

இதற்கு ஜனாதிபதியின் பதில் இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் காணப்படுகின்றது. இவைகள் நிறைவேற்றப்படுமா ? அல்லது நிராகரிக்கப்படுமா ? அது கேள்வியாகவுள்ளது.

நிறைவேற்றபடுவதற்கான தெளிவான உறுதிப்பாடு கிடைக்கும் பட்சத்தில் ஜனாதிபதியினை ஆதரிப்பது தான் பொருத்தமாகும். இல்லை என்றால் எதிர்கட்சி பொதுவேட்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படலாம் அங்கும் இதில் குறைப்பு காணப்படுமெனில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த தேர்தலில் அமைதியாகவே இருக்க நேரிடலாம் என்ற கருத்தும் கசிந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவை எடுக்க முடியாத நிலையில் காணப்படுவதையும் இங்கு கூறவேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த வரையில் திடீர் திடீர் என தமது முடிவை மாற்றும் ஒரு கட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த தேர்தலிலும் கட்சிக்குள் கடும் மோதல்கள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீ்ம் அவர்களை பொறுத்த வரையில் ஆளும் கட்சியில் அமைச்சராக இருக்கின்றதால் ஜனாதிபதியினை அண்மையில் தமது கட்சி உறுப்பினர்களுடன் சென்று சந்தித்து சில கோறிக்கைகளை முன் வைத்துள்ளார்.

அவைகள் தொடர்பில் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்று கூறியுமுள்ளார். ஆனால் அவர் இவ்வாறான நிலையில் யாரை ஆதரிக்கப் போகின்றார் என்பதும் முடிவில்லாத ஒன்றாக இருக்கின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்ப்பட வேண்டும் அதற்காகத்தான் எதிர்கட்சி வேட்பளார் போட்டி என்று சொன்ன போதும், தற்போது அந்த அணியில் உள்ளவர்கள் யார் என்பதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிந்து வைத்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க என்ற ஒருவர் அந்த கட்சியின் சாரதியாக இருக்கும் வரை அதில் பயணிக்கமுடியாது என்ற வாசகத்தை முன்னால் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் ஒரு முறை கூறியது, தற்போதைய அமைச்சரம், தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஞாபகம் வந்துவிட்து போல் இருக்கின்றது.இருந்த போதும் தற்போது நாட்டில் காணப்படும் இன சமச்சிர் அற்ற சூழ் நிலையில் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கோறிக்கைகள் என்பது நிறைவேற்றக் கூடியதா ? என்று கூற முடியாது.

அதே போல் தான் அமைச்சர்கள் அமைச்சரவையில் கடந்த காலங்களில் முன் வைத்த பல முஸ்லிம் சார் கோறிக்கைகளை நிறைவேற்ற ஜனாதிபதி முன் வந்த போது அங்கிருந்த ஜாதிக ஹெல உருமய கட்சி அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்ததை நாம் காமுடிந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறியுமுள்ளது.

இவர்களின் வெளியேற்றத்துடன் இவர்களுக்குள் ஒழிந்திருந்த பொதுபல சேனா சந்தரப்பவாத அறிக்கைகளை விட ஆரம்பித்துள்ளதை நாம் பார்க்கின்றோம். பொதுபலசேனாவை பாதுகாத்தவர்கள் யார் என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இன்று இந்த பலசேனா தனித்து நின்று பிரசாரங்களை செய்கின்றது என்பது முஸ்லிம்களுக்கு கிடைத்த முதலாவது வெற்றியாகும்.பொதுபல சேனாவின் அழிவு இதலிருந்து ஆரம்பித்து விடடள்ளதை காணமுடிகின்றது.

அடுத்த கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.இலங்கைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி அரசியல் செய்கின்றது என்றாலும் அவர்களது சர்வதேச நகர்வுகள் வித்தியாசமானது.

குறிப்பாக தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடமிருந்து பாதுகாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேச நீதிமன்றில் மரண தண்டணை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான நிலைகப்பாட்டில் இன்னும் அவர்கள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்த விடயம், ஜனாதிபதி மஹிந்த தோற்கடிக்கப்படும் பட்சத்தில் அந்த கனவு நிறவேறிவிடும் என்று ஆர்வத்துடன் இருந்த அந்த கட்சி இன்று சற்று பின்னிற்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய சிரச தொலைக்காட்சி செய்தியில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ள கருத்தில் ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்படமாட்டாது,நாட்டின் பாதுகாப்பு தொடர்பான,படை பராமரிப்பு தொடர்பான அனைத்து விடயங்களையும் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடமே இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதனை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறியுள்ளனர்.இவ்வாறான நிலையில் மஹிந்தவா ? மைத்திரியா ? என்ற கேள்விகுள்ளாகியுள்ள கூட்டணி தனது இறுதி தீர்மாணத்தை இன்னும் 3 தினங்களில் அறிவிக்கும் என்று கூறியுள்ளது.

அதே வேளை இந்தியாவை பொருத்த வரையில் மஹிந்த வெற்றி பெரவதன் மூலமே பல்வேறு நன்மைகள் இருக்கின்றது என்பதை எற்கனவே வாழ்த்தாக தெரிவித்துமுள்ளன.அப்படியெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம்.கட்சிகளுக்கு அப்பால் வாக்காளர்கள் என்ன முடிவை எடுக்க வேண்டுமோ அதனை அவர்கள் எடுப்பார்கள் என்பது திண்ணம்.

இந்த நிலையில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற போது முஸ்லிம்களும்,தமிழர்களும் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றனர்.குறிப்பாக இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை மையப்படுத்தி சிலர் சிந்திக்கின்றனர்.சிலர் ஒரு சில நிகழ்வுகளின் பின்னணியினை வைத்து சிந்திக்கின்றனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் கடந்த கால துண்பங்கள்,நிகழ்கால நடப்புக்களை்,எதிர்கால் செயற்பாடுகள் என்ற முன்று காலங்களையும் ஆழமாக சீர்துாக்கிப்பார்த்து செயற்படுவது தான் காலத்தின் தேவையாகும்.இந்த நிலையினை பார்க்காமல் பேச்சுக்களுக்கும்,போலி வாக்குறுதிகளுக்கும் நம்பி ஏமார்ந்து நாம் வாக்குகளை சிதறடிப்போமெனில் மீண்டும் எமது பாதுகாப்பு கேள்விக்குரியானதே.
( எழுதுவது -நீதிமகான் )
( தொடரும்………………)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிங்கா படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல்!!
Next post ரஜினி பிறந்தநாளில் காக்கிசட்டை ஆடியோ வெளியீடு!!