பள்ளி வேனுக்குள் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: டிரைவர் கைது!!
மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மழலையர் வகுப்பில் பயின்றுவரும் 5 வயது மாணவியை வேனுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவ-மாணவிகளை பள்ளி வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அந்த வேனின் டிரைவர், இறுதியாக வேனுக்குள் தனியாக இருந்த அந்த 5 வயது சிறுமியுடன் இந்தூர் விமான நிலையம் அருகே உள்ள தனிமையான இடத்தில் வேனை நிறுத்தினார்.
அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமின்றி, இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
வீடு திரும்பிய சிறுமி இந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறி அழுதாள். இதனையடுத்து, வேன் டிரைவர் அஜய் சோலாங்கி என்பவனை கைது செய்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating