நபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 20 Second

woman_chopping_002அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரை கொன்று சமைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் ஏஞ்ஜெலா ஸ்டோல்ட் (Angela Stoldt Age-42) என்ற பெண் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஜேம்ஸ் ஷியபருடன் (James Sheaffer Age-36) தகராறு செய்துள்ளார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்குள் தகராறு அதிகரிக்கவே ஆத்திரமடைந்த ஏஞ்ஜெலா, ஐஸ் கட்டிகளை எடுக்கப் பயன்படும் கருவியால் ஜேம்ஸின் கண்ணுக்குள் குத்தி, பின் கழுத்தை இறுக்கி அவரை படுகொலை செய்துள்ளார்.

இதன்பின் ஜேம்ஸின் உடலை துண்டுகளாக வெட்டிய இவர், அவற்றை பாத்திரங்களில் போட்டு ஓவன் அடுப்பில் வைத்து சமைக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் ஓவன் அடுப்பு சரியாக செயற்பட மறுத்ததால், அவர் தனது இளவயது மகன்களின் உதவியுடன் அவற்றை பைகளில் போட்டு தனது வீட்டுக்கு அருகே உள்ள பகுதிகளில் வீசியுள்ளார்.

இந்த கொலையை கண்டுபிடித்த பொலிசார், ஏஞ்ஜெலாவை கைது செய்ததுடன், கொல்லப்பட்ட ஜேம்ஸின் உடலை தேடியுள்ளனர்.

இதில் ஜேம்ஸின் உடலில் இருந்த 206 எலும்புகளில் 56 எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட பிறகு தற்கொலைக்கு முயன்ற ஏஞ்ஜெலாவை காப்பாற்றிய பொலிசார், அவர் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஏஞ்ஜெலாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆம்பள படத்திற்காக இத்தாலி செல்லும் விஷால்-ஹன்சிகா!!
Next post திருவல்லிக்கேணியில் பெண் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது!!