நஸ்ரியாவால் பஹத் பாசிலுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!!

Read Time:1 Minute, 44 Second

Untitled-141நடிகை நஸ்ரியாவின் கணவரும் பிரபல மலையாள நடிகருமான பஹத் பாசில் மீது ரூ.4 இலட்சம் மோசடி புகார் ஒன்று தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல மலையால தயாரிப்பாளர் அரோமா மணி என்பவர் நேற்று மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் ஒன்றில், ‘பஹத் பாசில் திருமணத்திற்கு முன்பே தனது படத்தில் நடித்து தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ரூ.4 இலட்சம் அட்வான்ஸ் பெற்றதாகவும், ஆனால் பலமுறை கால்ஷீட்டுக்களை மாற்றி மாற்றி கொடுத்துவிட்டு நடிக்க வர மறுப்பதாகவும் தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மலையாள தயாரிப்பாளர் சங்கம் பஹத் பாசிலுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் பஹத் பாசில் நடிக்க வராததற்கு நஸ்ரியாதான் காரணம் என்று கூறப்படுகிறது. அரோமா மணி படத்தில் ஏற்கனவே நஸ்ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்ததாகவும், ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நஸ்ரியா கொடுத்த நெருக்கடி காரணமாக பஹத் பாசில் அரோமணி படத்தில் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணிடம் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!
Next post தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக; பணமும், அமைச்சுப் பதவியுமா..? – இரவி- (மைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள்)!!