பெண்களிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட ஊராட்சி தலைவருக்கு சரமாரி அடி–உதை!!

Read Time:2 Minute, 3 Second

c313840f-e607-49e6-ab3c-13e0156026ad_S_secvpfகூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு ஊராட்சி, ஜெயாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராமன். இவர் காயரம்பேடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். நேற்று 50-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட சஞ்சய்நகரில் வடமாநில வாலிபர்கள் சிலர் நிர்வாணமாக நின்றுகொண்டு அப்பகுதியில் பெண்களை கலாட்டா செய்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனை தட்டிகேட்க அப்பகுதிக்கு சென்றேன். அங்கு ஒரு வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தேன்.

அப்போது கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வினோத்குமார் என்னிடம் தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஏற்கனவே பெண்கள் பாத்ரூமில் குளிக்கும்போது செல்போனில் வீடியோ மற்றும் படம் எடுத்த வழக்கில் கைதாகி சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் என்னை அடித்து உதைத்து கத்தியை காட்டி மிரட்டிய அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் எஸ்ஐ டில்லிபாபுவிடம் கூறி கதறி அழுதார். இதனால் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது!!
Next post வாக்காளர் அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு!!