சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தந்தையின் நண்பர் கைது!!

Read Time:2 Minute, 55 Second

946dbfa2-775a-401f-99b2-094928b37322_S_secvpfகோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள சேத்துமடையை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரியா (வயது 12 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர்கள் கூலி வேலைக்கு தினமும் சென்று விடுவார்கள்.

படிக்க செல்லாததால் வீட்டில் பிரியா மட்டும் எப்போதும் தனியாக இருந்தார். இதை பிரியாவின் வீட்டுக்கு அவரது தந்தையை பார்க்க அடிக்கடி வரும் சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்த சுப்ரமணி (30) கவனித்து வந்தார்.

அவருக்கு பிரியாவை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரியாவிடம் உன்னுடைய அப்பா, அம்மாவை கட்டிப்போட்டுள்ளனர். அங்கு உடனே செல்ல வேண்டும் என்றார். வழக்கமாக வரும் நபர் சுப்ரமணி என்பதால் பிரியா அதை உண்மை என நம்பி அவருடன் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு பிரியாவை சுப்ரமணி அழைத்து சென்றார்.

அவரிடம் பிரியா அம்மாவிடம் அழைத்து செல்வதாக கூறி இங்கு எதற்கு என்னை கூட்டி வந்தீர்கள்? என்று கேட்டார். சுப்ரமணி அவரை மிரட்டினார். அப்போது தான் தன்னை சுப்ரமணி கடத்தி வந்தது பிரியாவுக்கு தெரிய வந்தது.

அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது வலுக்கட்டாயமாக பிரியாவை சுப்ரமணி பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்த பிரியாவின் போராட்டம் பலனில்லாமல் போனது.

மயக்கமடைந்த பிரியாவை அங்கேயே போட்டுவிட்டு சுப்ரமணி தப்பி ஓட்டம் பிடித்தார். தகவலறிந்து பிரியாவை மீட்ட பெற்றோர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே பிரியாவின் பெற்றோர் ஆனைமலை போலீசில் சுப்ரமணி மீது புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்குறிச்சி அருகே விதவை பெண்ணை கொன்றவர்கள் யார்?: போலீசார் விசாரணை!!
Next post எபோலாவுக்கு தீர்வு காணும் சீனா (வீடியோ இணைப்பு)!!