கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி: தூக்க மாத்திரை கொடுத்து தீர்த்து கட்டினார்!!

Read Time:5 Minute, 37 Second

5ccf6cb6-d056-401a-8d16-7f5f72ab428b_S_secvpfவிழுப்புரம் வண்டி மேட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). கூரியர் நிறுவன ஊழியர். இவரது மனைவி வித்யா (29) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு புவனாஸ்ரீ (11), விக்னேஷ் (9) கோவைஸ்ரீ (4) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் வடிவேல் திடீரென மாயமானார். அவர் விழுப்புரம் மாம்பழப்பட்டு இடையே உள்ள மேம்பாலம் அருகே பிணமாக கிடந்தார். அவர் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் பிணம் கிடந்த இடத்தில் இருந்து வடிவேல் வீட்டுக்கு ஓடிவந்தது. குளியல் அறையை நோக்கி குரைத்தபடி இருந்தது. அந்த அறையை போலீசார் திறந்து பார்த்தபோது வடிவேலுவின் மனைவி வித்யாவின் ஆடைகள் இருந்தன. அந்த ஆடையில் ரத்த கரைகள் படிந்திருந்தன.

எனவே போலீசாருக்கு மனைவி மேல் சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் கணவரை தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ததாக வித்யா கூறினார். அவரது கள்ளக்காதலன் பெயர் சூரியமூர்த்தி (வயது 23) வடிவேல் வீட்டின் அருகில்தான் அவர் வசித்து வந்தார்.

சூரியமூர்த்தி வக்கீலுக்கு படித்தவர். சமீபத்தில் நடந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் சூரியமூர்த்திக்கும் வித்யாவுக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விஷயம் வடிவேலுக்கு தெரியாது.

ஒரு மாதத்துக்கு முன்பு சூரியமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் வித்யாவை கடக்குப்பம் கோவிலுக்கு அழைத்து சென்றதை வடிவேல் பார்த்து விட்டார். உடனே வடிவேல் தனது தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சூரியமூர்த்தியை பின்தொடர்ந்து சென்றார். கோவிலில் இருவரும் ஒன்றாக அமர்ந்து இருப்பதை பார்த்த வடிவேல் அவர்களிடம் தகராறு செய்தார்.

பின்னர் வீடு திரும்பிய வடிவேல் இதுபற்றி வித்யாவின் உறவினர்களிடம் கூறினார். அவர்கள் கணவன்–மனைவி இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். வித்யாவிடம் இனி சூரியமூர்த்தியிடம் உள்ள உறவை துண்டித்துக்கொள் என்று கண்டிப்புடன் கூறி சென்றனர்.

ஆனால் சூரியமூர்த்தியிடம் உள்ள உறவை வித்யாவால் துண்டிக்க முடியவில்லை. இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துகட்டுவது என்ற முடிவுக்கு வந்தார். இதுபற்றி காதலன் சூரியமூர்த்தியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் வடிவேலுவை கொலை செய்ய சம்மதித்தார்.

இதற்காக சூரியமூர்த்தி 25 தூக்க மாத்திரைகளை வாங்கி வித்யாவிடம் கொடுத்தார். இவற்றை உணவில் கலந்து உனது கணவருக்கு கொடு என்று கூறினார். நேற்று முன்தினம் இரவு வடிவேல் தோசை சாப்பிட்டார். அதில் சட்னியில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். சிறிது நேரத்தில் வடிவேல் தூக்கத்தில் விழுந்தார்.

உடனே சூரியமூர்த்திக்கு வித்யா தகவல் கொடுத்தார். அவர் வித்யா வீட்டுக்கு விரைந்து வந்தார். தூங்கியபடி இருந்த வடிவேல் தலையில் இரும்பு பைப்பால் அடித்தார். இதில் அந்த இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.

நள்ளிரவு நேரத்தில் வித்யாவும், சூரியமூர்த்தியும் வடிவேல் பிணத்தை ஸ்கூட்டரில் எடுத்து சென்று மாம்பழப்பட்டு சாலை மேம்பாலத்தில் வீசிவிட்டு வந்தனர்.

வித்யா–சூரியமூர்த்தி இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வடிவேல் பிணத்தை வித்யா–சூரியமூர்த்தி இருவரும் சேர்ந்து எடுத்து சென்றார்களா? அல்லது பிணத்தை எடுத்து செல்லவேறு யாரும் உதவினார்களா? என்பதில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தாண்டில் ஆட 5 கோடி சம்பளம் கேட்ட நடிகை!!
Next post காதலரை மறக்க முடியாத நடிகை!!