ரெயிலில் பயணியிடம் செல்போன்–பணம் திருட்டு: அரவாணிகள் 2 பேர் கைது!!

Read Time:2 Minute, 23 Second

e62fb1c5-b7fb-4412-821d-983c0d298ef8_S_secvpfசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஷோரனூரை சேர்ந்த செரீப் (வயது 23) என்பவர் கடந்த நவம்பர் மாதம் 24–ந் தேதி பயணம் செய்தார்.

திருவள்ளூருக்கும்–அரக்கோணத்திற்கும் இடையே செல்லும்போது சில திருநங்கைகள் அவர் அமர்ந்திருந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் பணம் கேட்டு உள்ளனர்.

அதன்பின் திருநங்கைகள் சென்று விட்டனர். சற்று நேரம் கழித்து செரீப் தனது பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.

திருட்டு நடந்த இடம் திருவள்ளூருக்கும்–அரக்கோணத்திற்கும் இடையே என்பதால் அந்த திருட்டு குறித்து செரீப் அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் தர வேண்டும்.

ஆனால் அரக்கோணத்தில் இறங்கினால் தனது பயணம் தடைப்பட்டு விடும் என கருதிய செரீப் கேரள மாநிலம் ஷோரனூர் சென்று அங்கு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்க ஷோரனூர் போலீசார் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு வழக்கு விவரத்தை அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டுகள் செந்தில்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன்படி ஷெரீப்பிடம் பணத்தையும், செல்போனையும் திருடிய அரவாணிகளான அரக்கோணத்தை சேர்ந்த திவ்யா (30), கடம்பத்தூரை சேர்ந்த இந்து (23) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை மீட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!
Next post கதாநாயகனாக நடிக்க மறுக்கும் நடிகர்!!