மலையக மக்களின் தேவை அறிந்து செயற்பட உள்ளோம்! இராஜதுரை!!

Read Time:2 Minute, 3 Second

1730356755Untitled-1மலையக மக்களின் தேவைகளை அறிந்து நாம் செயற்பட உள்ளோம் என, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரை தெரிவித்துள்ளார்.

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து, ஹட்டனில் நடைபெற்ற பிரச்சாரச் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

மலையக மக்களின் லயன் வாழ்க்கை முறையை ஒழித்து, காணி உரிமையுடன் கூடிய தனி வீடமைப்புத் திட்டம் மற்றும் நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உயர்தரத்திலான பாடசாலைகள் அமைத்தல் என இரண்டு விடயங்கள் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தோடு மலையக மக்களின் தேவைகளை அறிந்து நாம் செயற்பட உள்ளோம்.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மலையகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி, அண்மையில் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமாரும் உடனிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாக்காளர் அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு!!
Next post ஆலங்குளம் அருகே 3 வயது சிறுவன் கடத்தல்?: போலீசார் தீவிர விசாரணை!!