மாந்திரீகத்தால் பிரச்சனையை தீர்ப்பதாக நிர்வாண பூஜை செய்து வாலிபரிடம் சில்மிஷம்!!

Read Time:2 Minute, 42 Second

ef80a23f-5dbc-4a44-b5f5-e853d7ed108c_S_secvpfசெங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கம்ப்யூட்டர் டிசைனர். இவர் சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் ‘பிரச்சனைகளை மாந்திரீகம் மூலம் தீர்க்கலாம்’ என்ற விளம்பரத்தை பார்த்தார்.

அதிலிருந்த செல்போனுக்கு போன் செய்து மாந்திரீகம் செய்ய வேண்டும் என்றார். எதிர்முனையில் பேசியவர்கள் ரூ. 20 ஆயிரம் தந்தால் முறைப்படி மாந்திரீகம் செய்து பிரச்சனையை தீர்ப்பதாக தெரிவித்தார்.

இதனை நம்பிய ராதாகிருஷ்ணன் அவர்களை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இதையடுத்து சென்னை சூளைமேடை சேர்ந்த காதர் பாஷா, சவுகத்அலி ஆகியோர் புதுப்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தனர்.

ரூ. 20 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் நிர்வாண பூஜைக்கு கன்னிப்பெண் வேண்டும் என்றனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் மறுத்தார். உடனே சிறுமியாவது வேண்டும். அப்படியானால்தான் பூஜை முழுமைபெறும் என்று சாமியார்கள் தெரிவித்தனர்.

இதற்கும் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரையே நிர்வாண பூஜைக்கு நிற்கும்படி சாமியார்கள் கூறினர். ‘டவல்’ கட்டிக்கொண்டு ராதாகிருஷ்ணன் நின்றபோது சாமியார்கள் பூஜை செய்து திடீரென அவரது டவலை அவிழ்த்து விட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 சாமியார்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களது கைகளை கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செங்கல்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து போலி சாமியார்கள் காதர் பாஷா, சவுகத்அலி ஆகியோரை மீட்டு கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கோவணத்துடன் வந்த காய்கறி வியாபாரி!!
Next post கோபி அருகே மூதாட்டி வீட்டில் பணம் கொள்ளை!!