இங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களை தாக்க சதி?: ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டத்தால் உஷார்!!

Read Time:1 Minute, 23 Second

0f6ff2f2-5fad-4c02-be43-7e294df0ca55_S_secvpfஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக ‘தி மிரர்’ பத்திரிகை கூறி உள்ளது.

இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‘‘உளவுத்துறையினர், ஐ.எஸ். தீவிரவாதிகளின் இணையதள உரையாடல்களை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். ராணி குடும்பத்தினரை தாக்குவது கடினம் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிந்துள்ளனர். எனவே அவர்கள் ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை அவர்கள் தாக்குதல் இலக்காக கொள்ளக்கூடும்’’ என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ராணியின் பாதுகாவலர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை, கிளாரன்ஸ் இல்லம் ஆகியவற்றில் ராணியின் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த.தே.கூ கலந்துரையாடல் – இன்னும் தீர்மானம் இல்லை!!
Next post ஐ.சி.யூ.வில் பெற்றெடுத்த குழந்தை: தாயின் வேதனைக்கு ஆறுதல் அளிக்க வருகிறது கூகுள் கிளாஸ்!!