இலங்கையில் சமாதானம், நம்பிக்கைக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறார் மூன்!!

Read Time:1 Minute, 22 Second

593362913Banசமாதானமானதும் நம்பிக்கைக்குரியதுமான தேர்தல் ஒன்றை நடத்த இலங்கை உறுதி செய்யும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதீத நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இடையே கடந்த வாரம் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்போது இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன், சிறுபான்மையினரும் பயமின்றி வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் பான் கீ மூனிடம் தெரிவித்ததாக ஐக்கிய நாடுகள் சபை செய்தி இணையம் தெரிவிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீஞ்சூர் அருகே வங்கி ஊழியரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை!!
Next post VIDEO:‘’இந்தியா என் உறவு! சீனா என் நண்பன்! தமிழர்களுக்கு நான் எதிரானவன் அல்ல!!