சிங்கை அருகே தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற மின் ஊழியர் கைது!!

Read Time:2 Minute, 12 Second

104d3015-4f28-4c38-badc-50568ec02f4f_S_secvpfநெல்லை மாவட்டம் சிங்கை அருகே உள்ள அடையகருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது27). அய்யப்பன் கேரளாவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிங்கை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரியும் மணிகண்ட பிரசாத் (43) என்பவர் தனது உதவியாளர் செட்டியூரைச் சேர்ந்த வாலிபர் ராஜபாண்டி (20) என்பவருடன் மின்சார மீட்டர் கணக்கெடுக்க சென்றார்.

ராஜபாண்டியை வீட்டுக்கு வெளியே நிற்க சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்ற மணிகண்ட பிரசாத் தனியாக இருந்த ராஜலட்சுமியை கற்பழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் இருந்து தப்பிய ராஜலட்சுமி அலறி கூச்சல் போட்டதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அதற்குள் மணிகண்டபிரசாத்தும், ராஜபாண்டியும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து ராஜலட்சுமி சிங்கை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது, பெண் வன்கொடுமை ஆகிய பிரிவில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

உடனடியாக மின்வாரிய ஊழியர் மணிகண்ட பிரசாத்தையும், அவருடன் வந்த உதவியாளர் ராஜபாண்டியையும் போலீசார் கைது செய்தனர். கைதான மணிகண்ட பிரசாத்தின் சொந்த ஊர் குமரி மாவட்டம் தக்கலை ஆகும்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழனி அருகே கொலை வழக்கில் வாலிபர் கைது!!
Next post விடுதியில் தங்கி படிக்க விரும்பாததால் ஓட்டம்: பிளஸ்–2 மாணவர் திருப்பதியில் மீட்பு!!