லிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!!

Read Time:1 Minute, 34 Second

7cf21a6b-a655-4cab-96c9-ae7b591512ba_S_secvpfலிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 3 காவலர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

குண்டு துளைக்காத கவசமணிந்து முகத்தை மூடியபடி 5 பேர் விடுதியில் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதாக விடுதியின் மேலாளர் அசன் அல்-அபே தெரிவித்தார்.

கடற்கரை ஓரமாக உள்ள இந்த விடுதியில் நுழைந்த தீவிரவாதிகள் முதலில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த சத்தம் கேட்டது விடுதியில் தங்கியிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேறும் படி மேலாளர் அபே தகவலளித்தார். உடனடியாக வெளியேறிய பயணிகளுடன் அபேவும் வெளியே வந்துள்ளார்.

சில வாடிக்கையாளர்கள் தப்பினாலும் நிறைய பேர் இன்னும் தீவிரவாதிகளிடம் பணயக் கைதிகளாக இருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் பயணத்தில் முகம் தெரியாத பாராட்டால் நெகிழ்ந்துபோன இளம் அம்மா (வீடியோ இணைப்பு)!!
Next post இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி 2 கோடி ரூபாய் நன்கொடை!!