தவறாக நடக்க முயன்ற தந்தை மீது நடவடிக்கை எடுங்கள்: பெண் டாக்டர் எழுதியுள்ள கடிதத்தில் பரபரப்பு தகவல்!!

Read Time:2 Minute, 31 Second

0dc2abaf-8082-4844-9b43-b816ec406ee2_S_secvpfபாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சாந்தினி தனது கைப்பட ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கையெழுத்து இட்டதோடு கைரேகையையும் பதித்துளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது தந்தை என்னிடம் பாலியல் ரீதியாக தவறான தொடுதலை அடிக்கடி செய்தார். சமீபத்தில் உச்சகட்டமாக கீழ்த்தரமாக நடந்துகொண்டார். இதை நான் வன்மையாக கண்டித்தேன். இதனால் எனக்கு மன நோய் என கூறி ஒரு மன நல டாக்டரிடம் அழைத்து சென்றனர். அந்த டாக்டர் தந்தை கூறியதுபோல நடந்துகொள் என கூறிவிட்டார்.

இதை நான் வெளியே கூறிவிடுவேன் என எண்ணி என்னை தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். அங்கு வைத்து நான் தற்கொலைக்கு முயன்றேன். என்னை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிவிட்டனர். பின்னர் வீட்டில் வைக்காமல் என்னை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டனர்.

அப்போது என்னிடம் அந்த காப்பகத்தில் நீ ஒரு பணியாளராக வேலை செய் என கூறியிருந்தனர். ஆனால் இங்கு வந்தபோதுதான் தெரிந்தது என்னை ஒரு மன நலம் பாதித்தவராகவே சேர்த்துள்ளனர் என்று. காப்பகத்தில் என்னை மன நலம் பாதித்தவராகவே நடத்தினர்.

ஒரு அறையில் அடைத்து வைத்து வெளியில் வராதபடி செய்தனர். அவ்வப்போது என்னை வெளியில் விட்டாலும் பாதிரியார் என்னை கண்காணித்தபடியே இருந்தார். சூழ்நிலை காரணமாக நான் சோர்வாக உள்ளேன். எனக்கு மன நலம் பாதிப்பு இல்லை. நன்றாகவே உள்ளேன். எனது வாழ்க்கையை நான் தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளேன். எனது பெற்றோரின் ஆதரவு எனக்கு தேவையில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் விவகாரத்தில் பெற்ற தந்தை மீதே வீண் பழி சுமத்துகிறார்: பெண் டாக்டரின் தாய் கண்ணீர் பேட்டி!!
Next post தாலி பிரச்சினையால் திருமணம் நடந்தது: வீட்டை விட்டு வெளியேறி மாலை மாற்றிய ஜோடி!!