தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன?: குலையுமா கூட்டமைப்பு? – செல்வரட்னம் சிறிதரன் (கட்டுரை)!!

Read Time:28 Minute, 5 Second

timthumb (1)தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்­வியும், அது தொடர்­பான சிந்­த­னையும் இப்­போது எழுந்­தி­ருக்­கின்­றது.

குறிப்­பாக பொதுத் தேர்தல் ஒன்று தெரு முனையில் வந்து நின்று எட்­டிப்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்ற ஒரு சூழ்­நி­லையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஒரு கட்­ட­மைப்­பாக இருந்து தேர்­த­லுக்கு முகம் கொடுக்­குமா?

இன்­றைய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் நில­வு­கின்ற அர­சியல் நிலை­மை­களில் அது சாத்­தி­யமா? என்ற கேள்­விகள் இயல்­பா­கவே தோற்றம் பெற்­றி­ருக்­கின்­றன.

இதற்கு இரண்டு முக்­கிய கார­ணங்கள் இருக்­கின்­றன. முத­லா­வ­தாக, இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­தை­யொட்டி, அதற்­கான ஏற்­பா­டு­களைக் கவ­னிப்­ப­தற்கும், அவ­ரு­டைய விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல் ஒழுங்­கு­களை மேற்­கொள்­வ­தற்­கு­மாக இரண்டு நாள் விஜ­ய­மாக இலங்கை வந்­தி­ருந்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்­களைச் சந்­தித்துப் பேசி­ய­போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஐக்­கியம் மிக­மிக முக்கியமா­னது, அவ­சி­ய­மா­னது என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

கூட்­ட­மைப்­பிற்குள் ஐக்­கி­யத்தை நிலை­நி­றுத்­து­வதில் பெரும் பங்கு மூத்த அர­சி­யல்­வா­தி­யா­கிய வய­தான சம்­பந்தன் அவர்­க­ளுக்கு இருக்­கி­றது.

அந்த ஐக்­கி­யத்தை பேணிப்­பா­து­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை அவர் முன்­னெ­டுக்க வேண்டும் என்று அவர் வெளிப்­ப­டை­யா­கவே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இரண்­டா­வ­தாக, ஐ.நா.வின் இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்கை, ஐ.நா. மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்­பிக்­கப்­ப­டாமல், வரும் செப்டெம்பர் மாதத்­திற்குப் பின்­போடப்பட்டிருப்ப­தை­ய­டுத்து, தமிழ் மக்கள் மத்­தியில் எழுந்­துள்ள அதி­ருப்தி நிலை­மையும், குறிப்­பாக உள்­ளக விசா­ர­ணையை ஏற்றுக் கொள்­வதா இல்­லையா என்­பது தொடர்பில் எழுந்­தி­ருந்த சர்ச்சையும் அவற்­றை­யொட்டி இடம்­பெற்­றி­ருந்த உருவப் படங்கள் மற்றும் உருவ பொம்மை எரிக்­கப்­பட்ட சம்பவங்­களும் முக்­கியம் பெற்று, கூட்­ட­மைப்பின் எதிர்­காலம் குறித்த கேள்­வி­களை எழுப்பியிருக்கின்றன.

தீவி­ர­வாத வழியில் சென்று, பின்னர் ஜன­நா­யக வழிக்குத் திரும்­பிய ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­களும், மித­வாத அர­சியல் கட்­சி­க­ளா­கிய இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி, தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி, தமிழ்க்­காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களும் பங்­கா­ளி­க­ளாக அங்கம் வகித்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இப்­போது நான்கு கட்­சி­களே மிஞ்­சி­யி­ருக்­கின்­றன.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையில், செயற்­பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து தமிழ்க் காங்­கிரஸ் வில­கி­யது. பின்னர் புளொட் அமைப்பு கூட்­ட­மைப்பில் இணைந்து கொண்டது.

இத­னை­ய­டுத்து, இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய ஐந்து கட்­சிகள் இணைந்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி, இருந்தும் இல்­லா­தது போன்­ற­தொரு நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து அந்தக் கட்சி விலகி இருக்­கின்­றதா அல்­லது விலக்­கப்­பட்டிருக்­கின்­றதா அன்றேல் விலக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா என்­பது தெளி­வில்­லாமல் இருக்கின்றது.

இந்த விடயம் குறித்த உண்­மை­யான நிலைப்­பாடு என்ன என்­பது இன்னும் பொது­மக்­க­ளுக்கு அறிவிக்கப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை.

எனவே, இத்­த­கைய ஒரு நிலையில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்­சிகள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தனி­யா­னதோர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்­க­ளாலும், கூட்­ட­மைப்பில் உள்ள பங்­காளிக் கட்­சி­க­ளி­னாலும் நீண்ட கால­மா­கவே வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால், கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வ­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்கப்பட்ட­தாகத் தெரி­ய­வில்லை. அந்த விட­யத்தில் இன்னும் முன்­னேற்றம் காணப்­ப­டாத ஒரு நிலை­மையே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வதில் பங்­காளிக் கட்­சிகள் ஒன்­றை­யொன்று குற்­றஞ்­சாட்டி, காலத்தைக் கடத்தி வந்­தி­ருக்­கின்­ற­னவே தவிர, சரி­யான நேரத்தில் சரி­யான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்து அத­னையோர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்­ய­வில்லை.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் அச்சம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, வெறும் கூட்­ட­மைப்­பாக உரு­வாக்­கப்­பட்­ட­தே­யல்­லாமல், அது, இறுக்­க­மான ஓர் அர­சியல் கட்­சி­யாக கட்­ட­மைக்­கப்­ப­ட­வு­மில்லை. உரு­வாக்­கப்­ப­ட­வு­மில்லை.

இதனால், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்­னமே கூட்­ட­மைப்பின் தேர்தல் சின்­ன­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

கூட்­ட­மைப்­புக்குத் தனி­யான கொடி உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று அதற்­கான இலச்­சினை ஒன்றும் கூட வடி­வ­மைக்­கப்­ப­ட­வில்லை.

இந்த நிலையில் அது தமி­ழ­ரசுக் கட­சியின் தயவில் பெய­ர­ளவில் செயற்­பட்டு வந்­தது, செயற்­பட்டு வந்து கொண்­டி­ருக்­கின்­றது.

கூட்­ட­மைப்பு பெய­ர­ள­வில்தான் செயற்­ப­டு­கின்­ற­தென்று கூறி­னாலும், அது உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற நிலையில் உள்­ளூ­ரிலும், சர்­வ­தேச அள­விலும், தமிழ் மக்­களின் அர­சியல் அமைப்­பாக அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. அங்­கீ­காரம் பெற்­றி­ருக்­கின்­றது.

சட்­ட­ரீ­தி­யாகப் பார்த்தால், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் பிர­தி­நி­தி­க­ளா­கவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்­துள்ள கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்கள் பாரா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் பெற்றிருக்­கின்­றார்கள்.

இதே­போன்­றுதான் பிர­தேச சபைகள், நக­ர­ச­பைகள், மாந­க­ர­ச­பைகள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்­களின் மாகாண சபை­க­ளிலும் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் அங்கம் வகிக்கின்­றார்கள்.

தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யி­டு­வ­தற்­காகத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற வேட்­பா­ளர்கள் யார் என்­பதை இறு­தி­யாக முடிவு செய்­கின்ற வல்­ல­மையும் அதி­கா­ரமும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­டமே இருக்­கின்­றது.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் சின்­னத்தில் கூட்­ட­மைப்பு வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­வ­தனால், வேட்பாளர் பட்­டி­யலில் தமி­ழ­ரசுக் கட்­சியின் செய­லா­ளரே, இவர்­கள்தான் வேட்­பா­ளர்கள் என்று உறுதிப்­ப­டுத்தி கையெ­ழுத்­தி­டு­கின்றார்.

இதனால் கூட்­ட­மைப்பின் சார்பில் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்கள் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தயவில், இறுதி தீர்­மா­னத்தில் தங்­கி­யி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

இதன் கார­ண­மா­கத்தான், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமை மனம் கோணாத வகையில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்­கின்ற கட்­சி­களின் தலை­வர்­களும் முக்­கி­யஸ்­தர்­களும் மிகவும் நிதா­ன­மாக நடந்து­கொள்­கின்ற போக்­கினைக் காண முடி­கின்­றது.

இந்த நிலை­மைக்கு விதி­வி­லக்­காக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யினர், கூட்­ட­மைப்பின் பதிவு விட­யத்தில் உரத்து குரல் கொடுத்து வரு­கின்­றனர். கூட்­ட­மைப்பின் பதிவு விட­யத்தில் கார­சா­ர­மான கருத்­துக்­களும், விமர்­ச­னங்­களும் கூட வெளி­வந்­தி­ருக்­கின்­றன.

ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வதில் முழு அளவில் உடன்­பாடு இல்­லாத ஒரு போக்­கி­னையே இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி இது­கால வரை­யிலும் கடைப்­பி­டித்து வந்­துள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஓர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்தால், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி செல்­வாக்கு இழந்­து­விடும் என்ற அச்­சமே இதற்குக் கார­ண­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி என்­பது பழம்­பெரும் கட்சி. தந்தை செல்­வா­வினால் கட்டி வளர்க்கப்பட்ட பெரு­மைக்­கு­ரிய கட்சி. அது அந்தக் காலத்தில் பல அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்னெ­டுத்­திருந்­தது.

ஆயுத ரீதி­யான போராட்­டங்கள் தோல்­வி­ய­டையச் செய்­ததன் பின்னர் எழுந்­துள்ள அர­சியல் சூழலில் மென்­வாத அர­சியல் போக்கில் தமிழ் மக்­க­ளுக்கு ஓர் அர­சியல் தலை­மையை வழங்கி வழி­நடத்திச்செல்­வ­தற்கு இலங்கைத் தமி­ழ­ர­சு­க் கட்­சியே பொருத்­த­மா­னது, சரி­யா­னது என்­பது தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரின் எண்­ண­மாக, முடி­வான தீர்­மா­ன­மாக இருக்­கின்­றது.

இதன் கார­ண­மா­கத்தான் தமி­ழ­ரசுக் கட்­சியை மக்கள் மத்­தியில் வலு­வான ஓர் அர­சியல் இயக்­க­மாக வளர்த்­தெ­டுக்க வேண்டும் என்ற ஆவலை அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சட்­ட­ரீ­தி­யாகக் கையாள்­கின்ற வலிமை தமி­ழ­ரசுக் கட்­சி­யி­டமே இருக்­கின்­றது.

இந்த அதி­கார பலம் அல்­லது அதி­காரம் வாய்ந்த ஆற்றல், தமி­ழ­ரசுக் கட்­சி­யிடம் இருப்­ப­துவும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஓரங்­கட்டி, இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியை வளர்த்­தெ­டுக்க வேண்டும் என்ற அந்தக் கட்­சி­யி­ன­ரு­டைய விருப்­பத்­திற்கு வலு சேர்ப்­ப­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஓர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உரத்து எழும்போ­தெல்லாம், அல்­லது அதற்­கான அழுத்­தங்கள் அதி­க­ரிக்­கின்ற போதெல்லாம், அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும், அல்­லது உரிய காலத்தில் அது பதிவு செய்­யப்­படும் என்­றெல்லாம் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மை­யி­ட­மி­ருந்து உத்­த­ர­வாதப் பதில் வரும்.

கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்கள் கூட்­டங்­களில் இந்த விடயம் விவா­திக்­கப்­ப­டும்­போது, இந்த விடயம் குறித்து தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் கலந்து பேசப்­படும், பேசிய பின்னர் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற வகை­யி­லான பதிலும் பல தட­வை­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான தட்­டிக்­க­ழிப்பு போக்­கு­க­ளுக்கு மத்­தியில் அந்த விட­யத்தை ஆராய்ந்து உரிய நட­வ­­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கட்சித் தலை­வர்கள், முக்­கி­யஸ்­தர்கள் அடங்­கிய குழு­வொன்றும் கூட நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அந்தக் குழு இது­வ­ரையில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யையும் எடுத்ததாகத் தெரி­ய­வில்லை.

தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­தி­ய­குழு தீர்­மானம்

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணியில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­தி­ய­குழு வவு­னி­யாவில் கூடி­யது. இறுக்கி மூடிய கத­வு­க­ளுக்குள் கூடிப் பேசிய இந்­தக்­குழு பல விட­யங்கள் குறித்து ஆராய்ந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

தமிழ் மக்­களின் காணிளை மீள கைய­ளித்தல், அர­சியல் கைதி­களை விடு­வித்தல், காணாமல் போன­வர்கள் சம்­பந்­த­மான நட­வ­டிக்­கை­களைத் துரி­த­மாக மேற்­கொண்டு, தேர்­த­லின்­போது கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­யின்­படி, உட­ன­டி­யாக இவை தொடர்பில் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் இனப்­பி­ரச்­சினை தீர்வு சம்­பந்­த­மாக ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய அர­சியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாம­த­மின்றி, உரிய நட­வ­டிக்­கையை ஆரம்­பிக்க வேண்டும் என இந்த மத்­தி­ய­குழு அரசை மீண்டும் வலி­யு­றுத்­து­வ­தா­கவும் தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருந்­தது.

அதே­வேளை, இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின், மாறி­யுள்ள அர­சியல் சூழ்­நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை மேற்­கொள்­கின்ற நட­வ­டிக்­கை­களை இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் இன்­றைய மத்­திய செயற்­குழு அங்­கீ­க­ரித்து ஏற்­றுக்­கொள்­கின்­றது என்ற தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

21.2.55தமி­ழ­ரசுக் கட்­சியின் பெருந்­த­லைவர் இரா.சம்­பந்தனுக்கும் எமது கட்­சியின் சர்­வ­தேச விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ளரும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரனுக்கும் எதி­ரான நியா­ய­மற்ற, ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நட­வ­டிக்­கை­களை ஈழத் தாய­கத்­திலும், புலத்­திலும் நிகழ்த்தியுள்ள விட­யங்­களை இந்த மத்­தி­ய­குழு கண்­டிக்­கின்­றது என்ற தீர்­மா­னமும் நிறைவேற்றப்பட்டது.

அத்­துடன் பெப்­ர­வரி மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்­பாணம் பஸ் நிலையப் பகு­தியில் காணாமல் போனோரின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்­து­மாறும், அர­சியல் கைதி­களை விடு­விக்­கு­மாறும், ஐ.நா.விசா­ரணை அறிக்­கையை தாம­தமின்றி சமர்ப்­பிக்­கு­மாறும் கோரி நடத்­தப்­பட்ட கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்­தின்­போது…..,

21.2.56அந்தப் போராட்­டத்­துடன் எந்­த­வி­தத்­திலும் சம்­பந்­தப்­பட்­டி­ரா­ததும், அது­வ­ரையில் எந்த விதத்­திலும் உச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருக்­கா­த­து­மான விட­ய­மான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னு­டைய உருவப் பொம்மை எரிக்­கப்­பட்­ட­மைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அங்­க­மாக இணைந்­துள்ள ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனும், இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மகளிர் அணி துணைச் செய­லாளர் அனந்தி சசி­த­ரனும் துணை போயி­ருந்­த­தாக, இந்த மத்­தி­ய­குழு கூட்டம் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தது.

அவர்­க­ளு­டைய இந்தச் செயற்­பாடு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மையைக் கேள்­விக்குறியாக்­கி­யுள்­ளது என்றும் அந்த மத்­தி­ய­குழு தெரி­வித்­தி­ருந்­தது.

அது மட்­டு­மல்­லாமல், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் என்ற பொறுப்பை பொறுப்பில்லாமல் பயன்­ப­டுத்தி பெருந்­த­லைவர் சம்­பந்தன், பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகியோ­ருக்கு எதி­ராகத் தொடர்ச்­சி­யாக, அவர் கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­வதைக் கண்டிப்பதுடன், அவர்­மீது தகுந்த நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளு­மாறும் தமி­ழ­ரசுக் கட்­சியின் பாராளுமன்ற உறுப்­பி­னர்­களை இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கேட்­டுக்­கொள்­வ­தா­கவும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யங்கள் யாவும் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. அதே­வேளை, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் நடத்­திய இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்கை ஏற்­க­னவே திட்டமிட்­ட­படி, மார்ச் மாதக் கூட்ட அமர்வில் சமர்ப்­பிக்­கப்­ப­டாமல், செப்­டெம்பர் மாதத்­திற்குப் பின்­போடப்­பட்­டமை தொடர்பில் உண்மை நிலைமை என்ன, அதன் பலா­ப­லன்கள் என்ன என்­பதைத் தெளிவுபடுத்தும் வகையில், இந்த மத்­தி­ய­குழு கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமர்ப்­பித்­தி­ருந்த அறிக்­கையும் ஊட­கங்­களில் வெளி­வந்­தி­ருந்­தது.

ஆனால், இந்தக் கூட்­டத்தில் நிறை­வேற்­றப்­பட்ட அல்­லது ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­பட்ட ஒரு விடயம் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

எந்தக் கார­ணத்தைக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­ட­மாட்­டாது என்­பதே அந்தத் தீர்­மா­ன­மாகும்.

கூட்­ட­மைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்­டத்தில் எழுந்த ஒரே­யொரு குரலும், அதி­காரப் பார்­வையின் மூலம் அடக்­கப்­பட்டு, கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வ­தில்லை என்ற முடிவு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தகவல் கசிந்­தி­ருக்­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பதிவு செய்­வ­தற்கு, தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் விரும்­ப­வில்லை என்ற விடயம் ஏற்­க­னவே பலரும் அறிந்த ஒன்­றாகும்.

ஆனால், வேறு பல முக்­கி­ய­மான விட­யங்கள் ஆரா­யப்­பட்ட அந்தக் கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்­டத்தில் அந்த நிலைப்­பாடு ஒரு தீர்­மா­ன­மாக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பது கவ­னத்­திற்கு உரி­ய­தாகும்.

தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகி­யோ­ரு­டைய உருவப் படங்கள் மற்றும் உருவப் பொம்மை எரி­யூட்­டப்­பட்ட சம்­ப­வ­மா­னது, கூட்டமைப்பின் ஒற்­று­மையை, கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்­கி­யி­ருப்­ப­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்ட அதே கூட்­டத்தில் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­ட­மாட்­டாது என்ற தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­டி­ருப்­பதும் சாதா­ரண விட­ய­மல்ல.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே, இலங்­கைக்­கான இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் வரு­கைக்கு முன்ன­தாக இலங்கை வந்­தி­ருந்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஐக்­கியம் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைச் சந்தித்துப் பேசிய போது, இந்தி யப் பிரதமரின் வருகையோடு தொடர்பு டையதாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

பல விடயங்கள் குறித்து தமிழ்த் தலைவர்கள் அவருக்கு எடுத்துக் கூறியிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியம் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட் டிருந்தார்.

இதனை, அவர் சாதாரண விடயமாகக் குறிப்பிடாமல், அதற்கு அழுத்தம் கொடு த்து, கருத்து வெளியிட்டிருப்பது முக்கிய மானது. அது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் எதிர்காலம் குறித்த பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி யிருக்கின்றது.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஐக்கியம் மிக மிக முக்கியமானது. எனவே, கூட்டமைப்பிற்குள் ஐக்கியத்தை நிலை நிறுத்துவதில், பெரும்பங்கு மூத்த அரசி யல்வாதியாகிய ஆர்.சம்பந்தனுக்கு இருக் கின்றது.

அந்த ஐக்கியம் தான் உங்களுக் கான விடுதலை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே, அந்த ஐக்கி யத்தை பேணிப் பாதுகாப்பதற்கான நட வடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியிருக்கின்றார்.

அதேநேரம், கூட் டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி அதற்குள் பல்வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் என்று ஆர்.சம்பந்தன் அதற்குப் பதிலளித்துள் ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியம் அதன் செயற்பாடுகள் என்பன ஓர் உள்ளக விடயம். ஒரு சில அரசியல் கட்சிகளினதும், அவை சார்ந்த ஒரு சமூகத்தைச் சார்ந்த விவகாரமாகும்.

இதற்கு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் அழுத்தம் கொடுத்து, அதன் ஐக்கியம் பேணப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என கூறியிருப்பது சிந்த னைக்குரிய விடயமாகும்.

இதனை கூட்டமைப்பில் இணைந்துள்ள தலைவர்கள், குறிப்பாக தமிழரசுக் கட்சி யினரும், தமிழ் மக்களும் தீவிர கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள்கள் ஆவணப்படம் தயாரிப்பு!!
Next post தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க…!!