முதுகில் கமெராவுடன் பறந்து உலக சாதனை படைத்த கழுகு: பிரமிக்க வைக்கும் துபாய் நகரம் (வீடியோ இணைப்பு)!!

Read Time:3 Minute, 1 Second

eagle_dubai_004முதுகில் கமெராவை கட்டிக்கொண்டு பறந்த கழுகு ஒன்று வானத்திலிருந்து துபாய் நகர அழகை பிரமிப்புடன் படம் பிடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கழுகுகளை பாதுகாப்பது குறித்து Freedom Conservation அமைப்பை சேர்ந்த ஜாக்கூஷ்-ஆலிவர் ட்ராவெர்ஸ்(Jazques-Olivier Travers) என்பவர் ஆண்டுதோறும் கழுகுகளை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

2015 ஆம் ஆண்டு துபாய் நகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்ட அவர், தர்ஷன்(Darshan) என்ற பெயருடைய கழுகுடன் நேற்று களத்தில் இறங்கியுள்ளார்.

கழுகின் முதுகில் கமெராவை கட்டிய அவர், உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமான பூரிஜ் கலிஃபா(Burj Khalifa) உள்ள பகுதிக்கு வந்துள்ளார்.

829.8 மீற்றர் உயரமுள்ள அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்று அமருமாரு கட்டளையிட்டதுடன், அந்த கழுகு பூரிஜ் கட்டிட உச்சியில் சென்று அமர்கிறது.

சிறிதுநேரத்தில் அங்கிருந்து கிளம்பிய கழுகு, வானலாவிய கட்டிடங்கள் துல்லியமாக தெரியுமளவில் துபாய் நகரம் முழுவதும் அந்த கழுகு சுற்றி வருகிறது.

இடையிடையே கழுகின் உரிமையாளர் கீழிருந்து சில சமிக்ஞைகளை காட்டியவாறு உள்ளார்.

கழுகுவின் இந்த பயணம் மூலம், பூரிஜ் கட்டிடம் முதல் பல உயரமான கட்டிடங்களை இதுவரை பார்த்திராத புது கோணத்தில் பார்க்க முடிகிறது.

துபாய் நகரம் முழுவதும் வலம் வந்த அந்த கழுகிற்கு, அதன் உரிமையாளர் ஒரு சமிக்ஞையை காட்டியவுடன், கழுகு தனது இறக்கைகளை மடித்து செங்குத்தாக தனது முதலாளியை நோக்கி கிழே பறந்து வந்து அவரது கையில் அமர்கிறது.

இந்த பிரமிப்பான காட்சியை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஆரவாரமாக கை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

பிரமிப்பான பயணம் மூலம் உலக சாதனை படைத்துள்ள கழுகு குறித்து பேசிய ஜாக்கூஷ், ஆபத்தான பறவைகளில் ஒன்றாக கருதப்படும் கழுகு மற்றும் பிற பறவைகளின் இயற்கை பண்புகளையும் அவற்றின் பயன்களையும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராதிகா ஆப்தேவின் நிர்வாண போஸ்!!
Next post யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும்: விஞ்ஞானிகள் தகவல்!!