தாம்பரம் அருகே வங்கி அதிகாரியை கடத்திய வழக்கில் பெண் கைது!!

Read Time:2 Minute, 23 Second

381f5fea-cadb-4016-8089-18242d84c2cb_S_secvpfதாம்பரத்தை அடுத்த கீழ்கட்டளையை சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

எனவே 2–வது திருமணம் செய்ய பத்திரிகையில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்தார். அதை தொடர்ந்து பூந்தமல்லியை சேர்ந்த வைஷ்ணவி (48) என்ற பெண் அவரை தொடர்பு கொண்டு நேரில் பார்த்து பேச விரும்பினார்.

அதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வர சொன்னார். அதன்படி அங்கு சென்ற ராமமூர்த்தியை வைஷ்ணவியும், அவருடன் வந்த 4 பேரும் அடித்து உதைத்து காரில் கடத்தி சென்றனர்.

பின்னர் அவரை மிரட்டி வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டனர். அதற்கு அவர் ரூ. 30 லட்சம் இருப்பதாக கூறுவே அதை எடுத்து தரும்படி கீழ்கட்டளையில் உள்ள வங்கிக்கு காரில் அழைத்து வந்தனர்.

அவர்கள் அனைவரும் வெளியே நின்றனர். இதற்கிடையே வங்கிக்குள் சென்ற அவர் தான் கடத்தப்பட்டது குறித்து தாம்பரம் போலீசுக்கு போன் மூலம் புகார் செய்தார். உடனே அங்கு வழியில் போலீசாரை பார்த்ததும் கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது, அவரை கடத்த உதவிய வைஷ்ணவி பற்றிய அடையாளம் தெரிந்தது. கடந்த ஆண்டு இதே போன்று பள்ளிக்கரணையில் பணத்துக்காக நடந்த கடத்தல் சம்பவத்தில் இவள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனவே வைஷ்ணவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபோன்று பல கடத்தல் சம்பவங்களில் இவள் ஈடுபட்டாளா என்ற கோணத்தில் அவளிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்வில் தோல்வி பயம்: பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை!!
Next post 60 வயதில் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுத்த வங்கி ஊழியரை கடத்திய கில்லாடி பெண்!!