கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் அனுப்பிய 3 ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது!!

Read Time:3 Minute, 0 Second

c210917f-4a02-4452-8953-259d5ccfb846_S_secvpfதமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 தேர்வு நடந்து வருகிறது. கடந்த 18–ந்தேதி கணித தேர்வு நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் 20 பேர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 19 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஒரு மாணவர் மட்டும் தேர்வு எழுத வரவில்லை.

அவரது கேள்வித்தாளை தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மகேந்திரன் என்பவர் தனது செல்போனில் படம்பிடித்து அதை வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து தனது நண்பரும் ஆசிரியருமான மத்தூரை சேர்ந்த இன்னொரு ஆசிரியர் உதயகுமார் என்பவருக்கு அனுப்பினார். அவர் மேலும் இரண்டு பேருக்கு அதை அனுப்பினார்.

ஆசிரியர் மகேந்திரன் பள்ளி தேர்வு அறையில் இருந்து வாட்ஸ்-அப்பில் கேள்வித்தாளை அனுப்பிக்கொண்டு இருந்த போது பறக்கும் படையினர் திடீரென்று அந்த அறைக்குள் நுழைந்து விட்டனர். அவர்கள் ஆசிரியர் மகேந்திரனின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது அவர் வாட்ஸ்-அப்பில் பிளஸ்–2 கேள்வித்தாளை அனுப்பியது உறுதி ஆனது.

இது குறித்து பறக்கும் படையினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு கண்காணிப்பு பொறுப்பாளராக பணியாற்றிய அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் நாகராஜ் முருகன் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசில் புகார் செய்யும் படி இணை இயக்குனர் நாகராஜ் முருகன் உத்தரவிட்டார். இது குறித்து கல்வித்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாளிடம் புகார் செய்யப்பட்டது.

அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பிளஸ்–2 கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் அனுப்பிய ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன் மற்றும் ஒருவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை!!
Next post குடியாத்தம் அருகே 3–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!