மயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் கணவன்–மனைவி தற்கொலை!!

Read Time:2 Minute, 0 Second

f72e3737-9a42-4389-b2c7-b1ddce4a3635_S_secvpfநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு தாளஞ்சேரி பெரிய தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (25) கூலித்தொழிலாளி.

இவரது மனைவி முத்தமிழ்செல்வி (22). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. வினா (3) என்ற பெண் குழந்தையும், விமலேஷ் (1) என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

நேற்று இரவு கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த முத்தமிழ்செல்வி வீட்டில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த வினோத்குமார் தப்பி ஓடி விட்டார்.

இந்த நிலையில் தூக்கில் தொங்கிய முத்தமிழ்செல்வியை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவல் வினோத்குமாருக்கு தெரியவந்தது. அவர் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்தார். அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வயல்வெளிக்கு சென்று வினோத்குமார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. கணவன்–மனைவி தற்கொலை செய்து கொண்டதால் 2 குழந்தைகள் அனாதையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடியாத்தம் அருகே 3–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!
Next post நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!