சீன நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்: அள்ளிப்போக அலைமோதிய கூட்டம்- வீடியோ இணைப்பு!!

Read Time:1 Minute, 45 Second

340ae485-f35f-46c8-a34f-6bc15242ff81_S_secvpfசீனாவில் லாரி ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட 7 டன் கெளுத்தி மீன்கள் சாலையில் விழுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மீன்களை அள்ளிச்செல்ல அலைமோதிய காட்சிகள் தற்போது வீடியோவில் வெளியாகியுள்ளது.

இங்குள்ள குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற ஒரு லாரி சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே இருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ கெளுத்தி மீன்கள் சாலை முழுவதும் கொட்டி சிதறிய விபரம், சில நூறு அடிகள் சென்ற பின்னரே அந்த லாரியின் டிரைவருக்கு தெரியவந்தது.

அதற்குள் சாலையில் குவிந்து கிடந்த மீன்களை அக்கம்பக்கத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாளிகளில் அள்ளிச் சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அந்த மீன்களை பொறுக்கி எடுத்து, சாலையோரமாக குவித்தனர்.

இதனால் அப்பகுதி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வயது சிறுமி கற்பழிப்பு: தாய்மாமன் உள்பட 4 பேர் விடுதலை – கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!
Next post பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது.. -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன்!!