கோவையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை: 2 பேர் கைது!!

Read Time:2 Minute, 41 Second

a4168f87-7ee4-4cf1-98aa-92eb5fea9b2d_S_secvpfகோவை வெரைட்டிஹால் ரோட்டில் ஓட்டலின் பின்புறம் உள்ள வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

அதன்பேரில் வெரைட்டிஹால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்–இன்ஸ்பெக்டர் ஜோதிமணி மற்றும் போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது ஓட்டலின் பின்புறம் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது. அதன்பேரில் அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 2 பெண்கள் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டனர். வீட்டில் இருந்த 10 செல்போன்கள், ரூ.2,500 ரொக்கம், செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் மாத்திரைகள், ஆணுறைகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

விபசாரம் நடத்திய பெண் கிருஷ்ணவேணி மற்றும் பெண்களை விபசாரத்துக்கு அழைத்து வந்த புரோக்கர் முருகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களை கிருஷ்ணவேணியிடம் முருகேஷ் அழைத்து வருவார்.

அந்த பெண்களிடம் கிருஷ்ணவேணி எத்தனை நாளைக்குத்தான் இப்படி கஷ்டப்படுவது? நான் சொல்வது போல் நீங்கள் நடந்து கொண்டால் உங்களுக்கு கை நிறைய பணம் கிடைக்கும். வசதியாக–ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறுவார்.

அதற்கு சபலப்பட்ட பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார். இதேபோல் வறுமையில் சிக்கித்தவித்த பெண்களையும் தனது வலைக்குள் கொண்டு வந்து வீழ்த்தியிருக்கிறார் கிருஷ்ணவேணி.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 வயது குட்டிப்பெண் டாலி: வில்வித்தைப் போட்டியில் தேசிய அளவில் சாதனை!!
Next post செல்போனில் ஆபாச படம் காட்டி மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் சஸ்பெண்டு!!