தமிழர்கள் மீது தனிப்பாசம் கொண்ட லீ குவான் யூ!!

Read Time:2 Minute, 37 Second

8ee426d3-fb2a-4117-873e-bebcf5552ae0_S_secvpfதற்போது சிங்கப்பூர் பிரதமராக லீயின் மூத்த மகன் லீசியன் லூங் இருக்கிறார். லீயின் வாரிசு என்பதால் எளிதில் சியனுக்கு பிரதமர் அரியணை கிடைத்திடவில்லை. ஹார்வர்டு பல்கலைகழகத்தில் முதுகலைபட்டம் பெற்று 13 ஆண்டுகள் ராணுவத்தில் பயிற்சி பெற்ற பிறகு தான் 1990–ல் துணை பிரதமர் ஆனார். 14 ஆண்டுகள் கழித்து 2004–ல் பிரதமர் ஆனார்.

நடிகர் ரஜினிகாந்திடம் டைரக்டர் பாலசந்தர் ஒருமுறை உனக்கு பிடித்த தலைவர் யார்? என்று கேட்ட போது டக் என்று சொன்னார். ‘எனக்கு பிடித்த தலைவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ என்று.

தமிழர்கள் மீது லீ தனிப்பாசம் கொண்டவர். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கை கட்டாயம் ஒரு சந்தோசமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும். அநீதியை பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டு தமிழர்களும் இருந்து வருகிறார்கள். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் சம உரிமை உண்டு. ஆனால் திறமையில் தமிழர்களைவிட பின் தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களை கொன்று வருகிறார்கள். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னை பொறுத்தவரை நியாய மானதே.

நான் ராஜபக்சேவின் சில பிரசாரங்களையும், மேடை பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் ஒரு சிங்கள வெறியர் என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக்கூடியவர் என்று புரிகிறது.

இந்த போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிகமானது. அவர்கள் வெகுநாட்களாக அமைதியாக இருக்கப்போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை அதிபர் நிராகரித்த விவகாரம்: நீதிமன்றத்தில் அப்பீல்!!
Next post கவருக்குள் செல்போனை மறைத்து சிங்கப்பூர் பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்த இந்திய வங்கி அதிகாரிக்கு சிறை!!