வெற்றிகரமாக ஏவப்பட்டது டிஸ்கவரி!

Read Time:2 Minute, 1 Second

discovery.2.jpgஅமெரிக்க விண்வெளி ஓடமான டிஸ்கவரி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 3 நாட்கலாக வானிலை மோசமாக இருந்ததால் டிஸ்கவரியை ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. இந் நிலையில் ஒரு வழியாக நேற்று டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்பட்டது. புளோரிடா மாநிலம், கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து டிஸ்கவரி ஏவப்பட்டது. இதில் 7 விண்வெளி வீரர்கள் பயணம் செய்கின்றனர். அமெரிக்க சுதந்திர தினத்தன்று டிஸ்கவரி ஏவப்பட்டுள்ளது.

டிஸ்கவரி வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து கென்னடி விண்வெளி மைய விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். டிஸ்கவரி ஓடம் தற்போது விண்ணில் உள்ள சர்வதேச விண்வளி ஆய்வு மையத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.

டிஸ்கவரியை ஏவியதன் மூலம் கடந்த ஒரு வாரமாக நாஸா விஞ்ஞானிகளிடையே நிலவி வந்த டென்ஷன் முடிவுக்கு வந்துள்ளது. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு 13 டன் எடை கொண்ட எரிபொருளை டிஸ்கவரி எடுத்துச் செல்கிறது.

விண்பயணம் மேற்கொண்டுள்ள வீரர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் ரீட்டர் மட்டும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கிக் கொள்வார். மற்றவர்கள் 2 வார கால பயணத்திற்குப் பின்னர் பூமிக்குத் திரும்பவுள்ளனர். ஜூலை 16ம் தேதி டிஸ்கவரி பூமிக்குத் திரும்புகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டேபோடாங் ஏவுகணையை ஏவியது வட கொரியா
Next post புலிகளின் தற்கொலை படை தினம்