ஆந்திராவில் 65 வயது நிரம்பிய பெண் கைதிகளுக்கு ஜெயிலில் சிறப்பு உணவு!!

Read Time:1 Minute, 27 Second

c1a2c520-e930-4249-9730-17e829996fce_S_secvpfவிசாகப்பட்டினத்தில் சமீபத்தில் நடந்த சிறைத்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக ஆந்திர சிறைத்துறை டி.ஐ.ஜி. கிருஷ்ணராஜு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:–

ஜெயிலில் இருக்கும் 65 வயது நிரம்பிய கைதிகள் சர்க்கரை வியாதி, இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். போதிய சத்துணவு கிடைக்காததால் அவருக்கு அந்த நிலை ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.

இதனால் வயது முதிர்ந்த பெண்களுக்கு சிறையில் தற்போது வழங்கப்படும் உணவுடன் கூடுதலாக தினமும் 100 மில்லி பால், ஒரு வாழைப்பழம், 3 உப்பு பிஸ்கட் வழங்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து உள்துறை செயலாளர் பையாரவு பிரசாத் ராவ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதற்காக ஒரு கைதிக்கு ரூ.9 முதல் ரூ.10 வரை கூடுதலாக செலவாகும். இந்த திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்து 18 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை: சாதித்த இந்திய மருத்துவர்கள்!!
Next post காளஹஸ்தி அருகே சிறுமி கடத்தி பலாத்காரம் : 2 பேர் கைது!!