இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்: அதிர வைக்கும் பேஸ்புக் வீடியோ!!

Read Time:2 Minute, 36 Second

63ba67cf-1b37-4a0a-b45f-87c4a372156b_S_secvpfஇங்கிலாந்தில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பரவி பார்க்கும் அனைவரையும் உலுக்கி வருகிறது.

பர்மிங்காம் கவுண்டியில் உள்ள பிராட் வீதியில் உள்ள சிட்டி சென்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில் உள்ள காட்சிகளின் படி, சீக்கியர் ஒருவர் ஒரு கும்பல் தாக்குதலை தொடங்குகிறது. அந்த கும்பலில் உள்ள வெள்ளை இனத்தை சேர்ந்த ஒருவர் அந்த சீக்கியரின் முகத்தில் வெறித்தனமாக குத்துகிறார். தாக்குதலை தாங்க முடியாத அந்த அப்பாவி சீக்கியர் தன் முகத்தை இரு கைகளால் மறைத்துக் கொள்கிறார். இருந்தும் அந்த நபர் தன் தாக்குதலை தொடர்கிறார். சுற்றி இருக்கும் பொதுமக்கள் இந்த தாக்குதலை வேடிக்கை பார்ப்பது அங்குள்ள மக்களின் மனதில் உறைந்திருக்கும் மற்ற மதத்தினர் மீதான வெறுப்பை படம் பிடித்துக் காட்டுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ள இந்த சம்பவத்தை படம் பிடித்த ஒருவர், அதை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவேற்ற, பார்க்கும் பலரையும் அந்த வீடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை கடுமையாக கண்டித்து பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான கருத்துக்கள் குவிந்துள்ளன. சம்பவம் நடந்த ஓட்டலில் உள்ள பவுன்சர்கள் கூட இதை தடுக்காதது வேதனை அளிப்பதாக உள்ளது.

இந்த வீடியோவைக் கவனித்த இங்கிலாந்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான சீக்கியர் முன்வந்து தனக்கு நடந்த அநீதியைச் சொன்னால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரினச் சேர்க்கையாளர்களை முதன் முறையாக அங்கீகரிக்கும் ஜப்பானின் டோக்கியோ மாவட்டம்!!
Next post நறுக்கினால் கண்ணீர் வராத நவீன வெங்காயம்: ஜப்பானில் உற்பத்தியானது!!