7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்க தயாராகும் அதிநவீன ரஷ்ய விமானம்: வீடியோ இணைப்பு!!

Read Time:2 Minute, 30 Second

e1f97834-32d1-40f9-8672-8c0736d7ddac_S_secvpfஅமெரிக்காவின் வல்லாதிக்க கனவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துவரும் ரஷ்யா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

உக்ரைன் நாட்டை உடைத்து வெகு சாதுர்யமாக கிரிமியாவை பிரித்து தனிநாடாக்கி, தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் அரசியல் ராஜதந்திரத்தை கண்டு உலக நாடுகள் அசந்துப்போய் வாயடைத்து நிற்கும் வேளையில் எதிர்கால போர் யுத்திகள் தொடர்பாகவும், போர்க்காலங்களை எதிர்கொள்ள வேண்டிய எதிர்கால அணுகுமுறைகள் தொடர்பாகவும் ரஷ்ய ராணுவம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துள்ளது.

அந்த சிந்தனையின் விளைவாக, ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலைக்கும் ஆயுதங்களையும், ராணுவ டாங்கிகளையும், காலாட்படைகளையும் அனுப்பி வைக்கும் ராட்சத சக்தி கொண்ட அதிநவீன விமானத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘PAK TA’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்த விமானம், சுமார் 400 ராணுவ டாங்கிகளையும், அவற்றுக்கு தேவையான வெடிப் பொருட்களையும் ஒரே வேளையில் சுமந்து கொண்டு ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் சென்றடைந்து விடும்.

மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையில் பறக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த விமானம், 200 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும் என ரஷ்யாவின் ராணுவ தொழில் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியான வழக்கு: 2-வது குற்றவாளியை கைது செய்தது சி.பி.ஐ.!!
Next post பிறந்து 18 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை: சாதித்த இந்திய மருத்துவர்கள்!!