சமூக அக்கறையுடன் கூடிய மும்பை ஐ.ஐ.டி.யின் முட்டாள் தின வீடியோவிற்கு அமோக வரவேற்பு – வீடியோ இணைப்பு!!

Read Time:1 Minute, 42 Second

7a12093a-c1d1-4723-b074-2b2b32d4739d_S_secvpfமும்பை ஐ.ஐ.டி. மாணவர்களின் சமூக அக்கறையுடன் கூடிய ஏப்ரல்-1 முட்டாள் தின வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் முட்டாள்கள் தினமான கருதப்படும் ஏப்ரல் முதல் தேதி அன்று தனி மனிதர்களில் ஆரம்பித்து பன்னாட்டு நிறுவனங்கள் வரை மற்றவர்களை ஏமாற்ற பல முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சில மும்பை ஐ.ஐ.டி. மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் ஒரு 100 ரூபாய் நோட்டை மடித்து போட்டுவிட்டு அதை மறைந்திருந்து வீடியோ எடுத்தார்கள். வீடியோ எடுக்கப்படுவது தெரியாமல் ஆசையாக 100 ரூபாயை எடுத்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.

மடிக்கப்பட்டிருந்த 100 ரூபாய் நோட்டை விரித்தால் அதில் ‘‘இதே முயற்சிதான் பொது இடங்களில் கிடக்கும் குப்பையை எடுக்கவும் தேவைப்படுகிறது” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அடுத்தவர்களை முட்டாளாக்கும் இந்த வீடியோவை புத்திசாலிதனத்துடனும் சமூக அக்கறையுடன் உருவாக்கிய மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவாவை தொடர்ந்து மராட்டியத்தில் ஆடை மாற்றும் பெண்ணை செல்போனால் படம் பிடித்த பேப் இந்தியா ஊழியர் கைது!!
Next post கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற மரியம் ஆசிப் சித்திக்கிக்கு உ.பி.அரசு சார்பில் பாராட்டு விழா!!