பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்!!

Read Time:2 Minute, 42 Second

b458b2fb-d7f6-47cd-a279-777e21231254_S_secvpfதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள காங்கயம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் மணிகண்டன்(வயது 22).

இவர்கள் கடந்த ஆண்டு பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்தனர். அப்போது புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தியா(19) என்ற பெண்ணை சந்தித்தார்.

‘கண்ட உடன் காதல்’ என்பார்களே அதேபோல் மணிகண்டன்–சந்தியா இடையே காதல் மலர்ந்தது. சந்தியா பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

அடிக்கடி பொள்ளாச்சிக்கு வரும் மணிகண்டன் சந்தியாவை சந்தித்தார். இருவரும் செல்போனில் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சந்தியாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் சந்தியாவுக்கு வரன் பார்க்கும் படலத்தை தொடங்கினர்.

இதுகுறித்து சந்தியா தனது காதலனிடம் கூறினார். திருமணம் செய்வது என முடிவில் உறுதியாக இருந்த அவர்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற சந்தியா தனது காதலுடன் பழனிக்கு சென்றார். அங்குள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு இருவரும் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் பாதுகாப்பு கோரி தாராபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

அவர்களிடம் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கரி விசாரித்தார். பின்னர் காதல் ஜோடியின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தார். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பெண் வீட்டார் திருமணமத்துக்கு சம்மதிக்க மறுத்தனர். இருப்பினும் காதல் ஜோடி மேஜர் என்பதால் அவர்களை பிரிக்க முடியாது என்று சப்–இன்ஸ்பெக்டர் கூறி விட்டார். அதைத்தொடர்ந்து காதல் ஜோடி தங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்க புறப்பட்டுச்சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாளை. அருகே கள்ளக்காதலை கண்டித்த மகளை வெட்டிக்கொன்ற விவசாயி: கள்ளக்காதலியுடன் கைது!!
Next post கோவையில் ஒரு தலைக்காதலில் விபரீதம்: விஷம் குடித்த வாலிபர் சாவு!!