எந்த கழிப்பறையை பயன்படுத்துவது?: சட்ட அங்கீகாரம் கிடைத்தும் கழிப்பிட பிரச்சனையால் அவதிப்படும் திருநங்கையர் சமூகம்!!

Read Time:8 Minute, 29 Second

24637bf6-17e8-4b0a-9b7b-69a251aab292_S_secvpfதிருநங்கையர்களை மூன்றாம் பாலின மக்களாக அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நாளின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை இன்று நாடு முழுவதும் உள்ள திருநங்கையர் கொண்டாடி மகிழ்ந்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 16 ஆயிரம் திருநங்கையர்கள் தங்களது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி பத்திரங்களில் கையொப்பமிட்டனர்.

காட்டில் வாழும் ஐந்தறிவு படைத்த கொடிய மிருகங்கள் கூட தங்களின் இனத்தை சேர்ந்த இதர மிருகங்களை காயப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ விரும்புவதில்லை.

ஆனால், ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்று தற்பெருமை பேசி வரும் மனித குலத்தை சேர்ந்த நாம் மட்டும்தான் நம்மில் ஒரு பிரிவினரை குறைந்தபட்சம் 100 அடையாள பெயர்களால் அழைத்து, தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரையும் குத்தி மனித சமுதாயத்தை விட்டு காலகாலமாக விலக்கியே வைத்துள்ளோம்.

பூர்வ ஜென்ம விதிப்பலனாகவும், ‘க்ரோமோசோம்’களின் குளறுபடியினால் விளைந்த (எதிர்) வினைபயனாகவும் மூன்றாம் பாலின மனிதப்பிறவிகளாக இந்த பூமியில் பிறந்து விட்ட திருநங்கையர்கள், உலகம் முழுவதும் மக்களால் புறக்கணிக்கப்படுவதுடன், அற்ப புழுக்களாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர்.

தாங்கள் செய்தறியாத தவறுக்கு தேவையற்ற தண்டனையை அனுபவித்து வரும் திருநங்கையர்கள், காலகாலமாக அடைந்து வரும் வேதனையும், அனுபவித்து வரும் இன்னல்களும் சொல்லில் அடங்காத-சொன்னால் விளங்காத-சொல்லி, விளங்கிய பின்னரும், யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத துயர தொடர்கதை என்றால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு அல்ல.

இந்த துயர தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி ‘தேசிய சட்டப் பணிகள்’ என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன், 15-4-2014 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. ‘திருநங்கைகளுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் வழங்க வேண்டும். சுகாதாரக் காப்பீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்’ எனவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

மூன்றாம் பாலினத்தவரை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவே கருத வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருந்ததும் நினைவிருக்கலாம்,

இதன் வெளிப்பாடாக, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதுவரை 40 லட்சத்து 90 ஆயிரம் பேர் தங்களை மூன்றாம் பாலினத்தவர்களாக பதிவு செய்துள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டின் இதே நாளில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு அரசு இயந்திரங்கள் எப்படி மதிப்பளிக்கின்றன? என்று சீர்தூக்கிப் பார்க்கப் போனால் யதார்த்த நிலைமை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

மூன்றாம் பாலினத்தவரும் இந்திய சமூகத்தில் ஒரு அங்கம் என்ற அங்கீகாரம் கிடைத்ததற்கான வெற்றியின் முதலாமாண்டு கொண்டாட்டத்தில் திருநங்கையர்கள் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் இதைப்பற்றி சிந்தித்துப் பார்ப்பது சாலப் பொருத்தமாக அமையும்.

கல்வி நிறுவனங்களில் இவர்களுக்கென தனி ஒதுக்கீடு இல்லை. ஆஸ்பத்திரிகளில் தனி படுக்கையறை வசதிகள் இல்லை. ரெயில் நிலையங்கள் போன்ற பரபரப்பான பகுதிகளில் இவர்களுக்கென தனி கழிப்பறை வசதிகளை செய்துத்தர இதுவரை எந்த மாநில அரசும் சிந்தித்துப் பார்த்ததாக கூட தெரியவில்லை. வேலை வாய்ப்பு உத்தரவாதம் என்பது இவர்களுக்கு இன்னும் ஏட்டுச்சுரைக்காய் கதையாகவே உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு கடந்த ஆண்டு போட்டியிட்ட மது கின்னர் என்ற திருநங்கை தன்னை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு எந்த பதவியயும், பொறுப்பையும், பணியையும் தங்களால் திறமையாக வகிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இந்த சமூகத்தினரிடம் காணப்படுகின்றது.

அதை சரிவர பயன்படுத்தி, மூன்றாம் பாலினத்தவருக்கும் முன்னுரிமை தந்து, அவர்களை மைய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள திருநங்கையர் தினமான இந்நாளில் நம்மில் ஒரு சிலராவது உறுதியேற்க முன்வர வேண்டும்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் சுப்ரீம் கோர்ட் தங்களுக்கு அளித்த அங்கீகாரத்தை கொண்டாடும் வகையிலும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் ஏ.கே.சிக்ரி மற்றும் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் விதமாகவும் சுமார் 16 ஆயிரம் திருநங்கைகள் இறப்புக்கு பின்னர் தங்களது கண்களை தேசிய கண் வங்கிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்து உறுதிமொழி பத்திரத்தில் இன்று கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சபதமேற்றுள்ளதாக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று நடைபெற்ற விழாவின்போது இவர்கள் அறிவித்துள்ளனர். உயிருடன் வாழும் எங்களை இந்த சமூகத்தில் உள்ளவர்கள் ஒதுக்கித் தள்ளினாலும், எங்கள் இறப்புக்கு பின்னர் அவர்கள் எங்கள் இனத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அதற்காவது எங்கள் கண்கள் பயன்படட்டுமே.., என்று இவ்விழாவில் பங்கேற்ற ஒரு திருநங்கை குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் டயரின் தடங்களால் விண்வெளியில் உள்ள தந்தைக்கு அன்பை வெளிப்படுத்திய சிறுமி: சிறப்பு வீடியோ!!
Next post ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் இணைந்தன: உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு!!