ஒடிசாவில் 8 வயது சிறுவன் நரபலி: மந்திரவாதி கைது!!

Read Time:1 Minute, 35 Second

db530f8c-e420-4c82-b99c-363f6bbb3542_S_secvpfஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கோகபாடா கிராமத்தில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த மந்திரவாதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனான ராஜேஷ் நாயக்(8) என்பவனை கடந்த திங்கட்கிழமையில் இருந்து காணவில்லை என அவனது பெற்றோர் போலீசில் நேற்று புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவந்த நிலையில் உள்ளூரில் உள்ள மந்திரவாதியுடன் அவனை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இங்குள்ள லுனா ஆற்றங்கரை பகுதியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில் ஒரு சிறுவனின் பிணம் கிடப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து, பிணத்தை கைப்பற்றிய போலீசார் உள்ளூர் மந்திரவாதியை பிடித்து விசாரித்தபோது, தனது மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காக ராஜேஷ் நாயக்கை நரபலி கொடுத்த உண்மை தெரியவந்தது. அந்த மந்திரவாதியை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்: கிராம பஞ்சாயத்தின் விநோத தீர்ப்பு!!
Next post பயிர்கள் சேதமடைந்ததைப் பார்த்த அதிர்ச்சியில், மாரடைப்பால் மேலும் 3 விவசாயிகள் மரணம்!!