பணகுடி அருகே சிறுமியை கற்பழித்த 2 மாணவர்கள் கைது!!

Read Time:2 Minute, 39 Second

856a8d46-e604-4553-97f3-ce227cb87baa_S_secvpfநெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் செல்வி (வயது 9). பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. செல்வி அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த 12–ந்தேதி பள்ளி விடுமுறை என்பதால் செல்வி வீட்டில் இருந்தாள். அவளது பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 9–ம் வகுப்பு மாணவன் அஜய் (15), 7–ம் வகுப்பு மாணவன் மதன் (12) ஆகிய 2 பேரும் செல்வி வீட்டுக்கு சென்று விளையாடினர்.

அப்போது 2 மாணவர்களும் செல்வியை அழைத்து சென்று விளையாடி உள்ளனர். சாதாரணமாக விளையாடிய 2 மாணவர்களும் சிறிது நேரத்தில் வரம்பு மீறினர். அந்த 2 மாணவர்களும் சேர்ந்து பலவந்தமாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் சிறுமி மறுத்த போது ஒரு மாணவன் பிடித்து கொள்ள, மற்றொரு மாணவன் பலத்காரம் செய்துள்ளான். அதன் பின்னர் 2 மாணவர்களும் இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதனால் சிறுமி செல்வி என்ன செய்வது என்று அறியாது தவித்தாள். நேற்று அந்த மாணவிக்கு வேதனை அதிகரித்ததால் பெற்றோரிடம் நடந்த விபரத்தை அழுது கொண்டே கூறினாள்.

இதனால் வெகுண்டெழுந்த அந்த சிறுமியின் தாய் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். பெண் போலீசார் விசாரணை நடத்தி அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அஜய், மதன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று அந்த 2 மாணவர்களையும் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை சிறுவர் ஜெயிலில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் திருமணத்தை மறைத்து மோசடி: பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில்!!
Next post பொள்ளாச்சியில் கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை கும்மாளம்: மனைவி புகாரால் கைது!!