சிலியில் எரிமலை வெடித்து சிதறும் பிரமாண்ட காட்சிகள்- வீடியோ இணைப்பு!!

Read Time:2 Minute, 52 Second

3050adbb-e98a-4f46-94aa-d507c4dab2fb_S_secvpf43 ஆண்டுகளாக செயலற்று இருந்த சிலி நாட்டின் கால்புகோ எரிமலை மீண்டும் வெடித்து, வானில் சாம்பல் மற்றும் புகையை கக்கி வருகிறது. எரிமலை வெடித்து சிதறும் பிரமாண்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. நேற்று வெளியிடப்பட்ட வீடியோவை இதுவரை 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

எரிமலை வெடிப்பதால் பொது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விழைவிக்கும் என்றாலும் கால்புகோ எரிமலை வெடித்து சிதறும்போது வெளிவரும் புகையும் சாம்பலும் வானில் உருவாக்கும் புகைக்கோளம் பார்ப்பவரை பிரமிக்க வைப்பதுடன் மட்டும் அல்லாமல் இயற்கையின் படைப்புக்கு முன் மனிதர்களின் ஆணவம் சுக்கு நூறாக உடைந்து போகும் எனபதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

அந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தெற்கு துறைமுக நகரமான பர்டோ மோண்டில் இருக்கும் கால்புகோ எரிமலை நேற்று முதல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் எரிமலையை சுற்றி உள்ள 20 கிலோ மீட்டர் பகுதியில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. எரிமலை வெடிப்பின் காரணமாக பனிக்கட்டிகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுவதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், காவல்துறையினருக்கு உதவ அந்நாட்டு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் 90 எரிமலைகளில், மிகவும் ஆபத்தானது கால்புகோ எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அருணின் பட வௌியீட்டை தள்ளி வைக்கச் சொன்ற அஜீத் – ஏன் தெரியுமா?
Next post பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார தந்தை கைது!!