அடி வயிற்றைக் கலக்கும் சாகச வீடியோ: கற்பனைக்கும் எட்டாத வானுயர கட்டிடத்தில் சர்க்கஸ்!!

Read Time:1 Minute, 34 Second

7080013f-a9af-40ee-9296-37977a91867a_S_secvpfதுபாயில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் 43-வது மாடியிலிருந்து சும்மா கீழே பாத்தாலே உயிர் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடும். அந்த 42-வது மாடியிலிருந்து ஒவ்வொரு தூணாக தாவித்தாவி போவதென்றால்….

”என்ன மனுஷய்யா நீயெல்லாம்” என்றுதான் ஓலக்கை பார்க்கும் அனைவரும் அதிர்ந்து போய் கேட்கின்றனர். ஸ்டண்ட் கலைஞரான ஓலக் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களுமின்றி இந்த சாகசத்தை செய்கிறார். இது மட்டுமின்றி தன் கையிலிருக்கும் கேமராவைக் கொண்டே இந்த சாகசத்தை வீடியோவாக பதிவு செய்கிறார்.

”இவ்ளோ ஒசரத்துல தாவிகுதிக்கிறியே, ஒனக்கு பயமா இல்லயா ராசா?” என்று கேட்டால் ”உயரமான கட்டிடத்தில் இருக்கும் போது நான் என்னை ஒரு பறவையைப் போல உணர்கிறேன். நான் வாழ்க்கையை வாழ்கிறேன்.. அதைக் கொண்டாடுகிறேன்” என்று தத்துவம் பேசுகிறார்.

”சரி ஒரே ஒரு தடவை கால் பிசகினா கூட உயிர் போய்டுமே” என்று பதறினால், ”ஆம் நிச்சயமாக” என்று கூறியபடி, அடுத்த கட்டிடத்தை தேடிப் போகிறார் சாகச நாயகன் ஓலக்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெரு குத்துச்சண்டைப் போட்டியில் 17 வயது வாலிபர் பலி!!
Next post கல்லூரி மாணவர் கொலை: 7 பேருக்கு ஆயுள் தண்டனை-சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது!!