போலீஸ் நிலையத்தில் தகராறு: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் பலி!!

Read Time:1 Minute, 30 Second

2ce6bc58-1e73-4432-998b-37ddfbab0e56_S_secvpfஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொத்தப்பேட்டையில் ஆயுத படை போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலைய மாடியில் 2 போலீஸ்காரர் துப்பாக்கி குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தனர்.

இருவரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரை இழந்தது தெரிய வந்தது. பலியான ஒரு போலீஸ்காரர் பெயர் முரளிகிருஷ்ணா. இன்னொருவர் பெயர் விரேஷ்.

இவர்கள் பணி மாற்றம் செய்வதற்காக அங்குள்ள டி.எஸ்.பி. அலுவலகம் வந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்களது துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டனர்.

இந்த சண்டையில் இருவரும் குண்டு பாய்ந்து இறந்தனர். இருவரின் தகராறுக்கும் காரணம் தெரிய வில்லை.

ஏற்கனவே இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக சக போலீஸ்காரர்கள் தெரிவித்தனர்.

இதனால் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. ரவிக்கிருஷ்ணா விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரத்த புற்றுநோய் தாக்கிய சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.!!
Next post திருமணமாகி 4 வருடமாகியும் கழிவறை கட்டித்தராத கணவனை பிரிந்த மனைவி!!